என்னாது சென்னைக்கு மழையா?.. வாய்ப்பில்லை ராஜா.. ஒரு வாரத்துக்கு எதிர்பார்க்காதீங்க!

Oct 22, 2023,04:23 PM IST

சென்னை: சென்னையில் அடுத்த ஒரு வாரத்துக்கு எந்த மழையையும் எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருட அக்டோபர் மாதம்தான் மிகவும் மோசமான மழைப் பொழிவை கொண்ட மாதமாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.




தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டது. ஆனால் மிகவும் மெதுவாக இருக்கிறது. பெரிய அளவில் மழை இல்லை. மழை தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் தற்போது அரபிக் கடலில் தேஜ் புயல் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. அதேசமயம், வங்கக் கடலில் குறைந்த காற்றவுத்தத் தாழ்வு உருவாகியுள்ள போதிலும் கூட உடனடியாக மழைக்கு வாய்ப்பில்லை.


இதையே தமிழ்நாடு வெதர்மேன் இன்று ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை யில் 2016ம் ஆண்டில்தான் அந்த வருடத்து அக்டோபர் மாதத்தில் மிகவும் மோசமான மழைப்பொழிவு இருந்தது. அதாவது அந்த மாதத்தில் மொத்தமே கிட்டத்தட்ட 22 மில்லி மீட்டர் அளவுக்குத்தான் மழை பெய்தது. அதன் பிறகு இந்த வருடம் அக்டோபர் மாதம்தான் மிகவும் குறைந்த மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. 




அடுத்த ஒரு வாரத்திற்கு வங்கக் கடலிலிருந்து எந்த நல்ல செய்தியும் சென்னைக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.


இருப்பினும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில், நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்