சென்னை: அதிமுக- தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான 3ஆம் கட்ட பேச்சு வார்த்தை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
ஏற்கனவே வடசென்னை, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் வட சென்னைக்குப் பதில் வேறு தொகுதியை தேமுதிக கேட்பதாலும், ராஜ்யசபா சீட் கண்டிப்பாக வேண்டும் என்று அடம் பிடிப்பதாலும்தான் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 1ஆம் தேதி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமம் வீட்டில் அதிமுக தேர்தல் குழுவினர் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி உறுதியானதாக தகவல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது 4 மக்களவைத் தொகுதியுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கண்டிப்பாக வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். இதனால் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டமால் இழுபறி ஏற்பட்டு வந்தது.
தேமுதிக உடனான பேச்சுவார்த்தை சமூகமாக சென்று கொண்டிருப்பதாக நேற்றுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக தேர்தல் குழு உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோர் இணைந்து தேமுதிக தரப்புடன் பேசவுள்ளனர். இதே குழுதான் நேற்று நடிகர் மன்சூர் அலிகானுடனும் பேசியது.
இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
{{comments.comment}}