- ஸ்வர்ணலட்சுமி
கொங்கு நாட்டு தலங்கள் 7ல் மூன்றாவதாக தலமாக சிறந்து விளங்குவது திருச்செங்கோடு. இது "கொடி மாடச் செங்குன்றூர் " என்று முன்பு அழைக்கப்பட்டது. கொடிமாட செங்குன்றூர் என்றால் கொடிகள் அசைந்தாடுகின்ற மாடமாளிகைகள் நிறைந்த செந்நிற மலையை உடைய ஊர் என்னும் பொருள்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருத்தலம் இன்று "திருச்செங்கோடு "என்று அழைக்கப்படுகிறது.
அமைவிடம் :
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வட்டத்தின் தலையிடமாக,ஈரோடு நகரில் இருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் திருச்செங்கோடு அமைந்துள்ளது. வடக்கில் சங்ககிரி, மேற்கில் ஈரோடும், தெற்கில் பரமத்தி வேலூர், கிழக்கில் நாமக்கல்லும் இந்நகரை சுற்றி அருகமைந்த குறிப்பிடத்தக்க நகரங்கள் ஆகும்.
திருமலையின் மீது அர்த்த நாரிஸ்வரர் (உமையொருபாகன்), செங்கோட்டு வேலவன், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய மும்மூர்த்திகள் கோயில் கொண்டுள்ளனர்.
தலப்பெருமை:

திருச்செங்கோடு கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஏழில் ஒன்றாகும்.மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூச்சிறப்புகளாலும் பெருமை உடையது இந்த ஸ்தலம்.நல்லதொரு வரலாறும்,நயன்மிகு புராணங்களும் கொண்டதாய்,அம்மையும், அப்பனும் கலந்தொரு திரு உருவில் அம்மையப்பனார் இறைவன் இத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு வேறு ஸ்தலத்திற்கு இல்லாத ஒன்றாகும் .
தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருப்புகழ்,கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலான திரு நூல்களில் இக்கோவில் போற்றப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த்திருவிழா (2026) இந்த ஆண்டு நிகழ்ச்சி நிரல் பார்ப்போம்.
1 ஆம் நாள் திருவிழா :
22.05.2026 வைகாசி 8 வெள்ளிக்கிழமை காலை திருமலையில் கொடியேற்றம்.
4 ஆம் நாள் திருவிழா:

25.05.2026 வைகாசி 11 திங்கட்கிழமை மதியம் சுவாமி திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளல்.
9 ஆம் நாள் திருவிழா :
30.05.2026 வைகாசி 16 சனிக்கிழமை காலை திருமாங்கல்ய தாரணம்,& சுவாமி புதிய திருத்தேருக்கு எழுந்தருளல்.
10 ஆம் நாள் திருவிழா :
31.05.2026 வைகாசி 17 ஞாயிற்றுக்கிழமை காலை அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் புதிய திருத்தேர் வடம் பிடித்தல்.
14 ஆம் நாள் திருவிழா:
04.04.2026 வைகாசி 21 ஆம் நாள் வியாழக்கிழமை காலை,சுவாமி மாலை மாற்றி அதிகாலை இருள் பிரிய திருமலைக்கு எழுந்தருளல்.
கைலாய வாத்தியம் முழங்க புதிய தேர் இழுக்கலாம் வாங்க.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென்தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
Never feel defeated.. நம்பிக்கை இழக்காமல் ஓடுங்கள்.. வெல்வீர்கள்!
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% மாணவர்கள் தேர்ச்சி.. வழக்கம் போல மாணவிகளே முதலிடம்!
{{comments.comment}}