நேராகத் தோன்றிடினும்.. அம்பு கொடியது..! (சிறுகதை)

Oct 13, 2025,04:25 PM IST

- மலர்விழி ராஜா


சோலையூர்.


அழகான  கிராமம். பசுமை நிறைந்த அந்த ஊரில் முத்தையா என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார் . பெயருக்கு ஏற்ப மிகச்சிறந்த நல்ல மனிதர். மனைவியும் ஒரு மகனும் இருந்தனர். முத்தையா  தினமும் கூலி வேலை செய்து  குடும்பத்தை நல்லவிதமாக கவனித்து வந்தார். 


அவரது மனைவி சாந்தியும் அவரது வருமானத்திற்கு ஏற்ப சிக்கனமாக செலவு செய்து தனது மகன் தர்ஷனை நல்லவிதமாக வளர்த்து வந்தாள்.


ஆனால்.. தர்ஷன் மிகவும் பொறுப்பற்றவனாக இருந்தான்.  எடுத்த பொருளையும் எடுத்த இடத்தில் வைப்பது இல்லை. படிக்கும் புத்தகங்களை அப்படியே விட்டு விட்டு விளையாட செல்வது. களைந்து கிடக்கும் தனது உடைகளை சரி செய்யாமல் அப்படியே போட்டு விடுவது தேவையில்லாமல் மின் விசிறிகளை சுழல விடுவது. உபயோகித்த தேவையற்ற பொருட்களை குப்பைத்தொட்டியில் சேர்க்காமல் இருந்த இடத்தில் அப்படியே விட்டு செல்வது வீட்டிற்கு யாரேனும் வந்தால் அவர்களுக்கு தேவையான பதில் சொல்லாமல் அவர்களை அலட்சியப்படுத்துவது இதுபோல் அவனது செயல்கள் ஒழுக்கமற்று இருந்தது. தந்தை வேலைக்கு சென்று விடுவதனால் . தாய் சாந்தி தான் அவனை கவனித்து வந்தாள்.


ஒரே மகன் என்பதினால் சற்று செல்லமாக கண்டிப்பதினால் தர்ஷன் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. இப்படியே காலம் கடந்தது.


குறிப்பிட்ட வயது வந்தபின்பு  தர்ஷன் உயர்கல்வி கற்க வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது . தர்ஷன் கல்லூரி படிப்பு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வந்தான் . தந்தை முத்தையாவிற்கு உடல் நலமின்றி அவரும் வீட்டில் இருந்து வந்தார். அப்போது தான் மகனின் நடவடிக்கைகளை கவனித்தார்.




தர்ஷன் நீ செய்வது சரியில்லை. இப்படி எந்த வேலையிலும் ஒழுக்கமற்று இருந்தால் உனது எதிர் காலம் எப்படி இருக்கும் ? எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறை வேண்டாமா என்று மிகவும் வருத்தத்துடன் கடிந்து கொண்டார் முத்தையா. தர்ஷனுக்கு கோபம் தலைக்கேறியது. சே என்னடா இது. சும்மா இப்படி செய். அப்படி செய். இங்கே வை.அங்கே வை என்று  கஷ்ட படுத்துகிறார்.

முதலில் வீட்டை விட்டு வெளியே எங்காவது சென்று விடலாம் என்பது போல் சலித்து கொண்டே அவர் மீது மிகவும் வெறுப்பாக இருந்தான் தர்ஷன்.


இதற்கிடையே  ஒரு உயர் பதவிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.

தாயும் தந்தையும் ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள்.

நேர்காணலுக்கான அலுவலகத்தை அடைந்ததும் உள்ளே  சென்று அமர்ந்தான் தர்ஷன்.


பதினைந்து பேராவது இருக்கும். எல்லோரும்  ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் சிரித்து கொண்டே அமர்ந்திருந்தனர்.

அருகே சில நாற்காலிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தது.. தர்ஷனுக்கு சட்டென்று தந்தையின் நினைவு வந்தது. ஏதோ நினைத்தான் . அதனை ஒழுங்குபடுத்தி வைத்து விட்டு பின் அமர்ந்தான்.


ஒவ்வொருவராக சென்று வந்தார்கள். சற்று நேரம் ஆகிவிட்டது என்பதினால் அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. பருகி விட்டு அவர்கள் அமர்ந்த இடத்தில் நாற்காலியின் கீழ் தேனீர் பருகியகோப்பையை வைத்தார்கள்.


தர்ஷனும் பருகிவிட்டு கோப்பையை கீழே வைக்க சென்றவனுக்கு தந்தை கோபமாக பேசுவது போல் தோன்றியது . எந்த வேலை செய்தாலும் ஒழுக்கமாக செய் என்பது போல் இருந்தது .உடனே எழுந்து சென்று அங்கு குப்பைகளை சேகரிக்கும் தொட்டியில் போட்டு விட்டு மெல்ல நடந்து வந்தான் அருகில் ஒரு பலகை மீது செய்தி தாள்கள் ஒழுங்கற்ற நிலையில் கிடந்தது. அதனை பார்த்ததும் மீண்டும் தந்தையின் நினைவு வந்தது . 


அட என்ன இது !

எங்கு சென்றாலும் அப்பா நம்மை கண்டிப்பது போலவே உள்ளதே என  அதனை சரியாக வைத்து விட்டு உள்ளே நுழையும் முன் அலுவலக வாசல் முன் போடப்பட்டிருக்கும் விரிப்பு சுருண்டும்  நகர்த்தும் கிடந்தது அதனையும் சரிசெய்து விட்டு வந்து அமர்ந்தான் தர்ஷன். இதற்கிடையே நேர்காணல் முடிந்து விட்டது அனைவரும் செல்லலாம் என்று அறிவித்தார்கள்.


எல்லாருடைய முகத்திலும் ஒரே கோபம். யாருக்காவது தெரிந்தவர்களுக்கு கொடுத்து இருப்பார்கள் என்று வருத்தமாக பேசி சென்றார்கள். தர்ஷனும் வெளியேற நினைத்த போது அலுவலக உதவியாளர் வந்து தர்ஷனிடம் உங்களை உள்ளே அழைத்து வர சொன்னார்கள் என்றார். தர்ஷனுக்கு எதுவும் புரியவில்லை.


உள்ளே சென்றதும் ஆய்வாளர் பணி ஆணையை தர்ஷனுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தர்ஷனுக்கு ஒன்றும் புரியவில்லை.  

ஐயா 

நான் இன்னும் நேர்காணலில் பங்கேற்க வில்லையே என்றான்.

தர்ஷன் நீங்கள் வந்ததில் இருந்து உங்களை கவனித்தோம்.

ஒழுக்கம் சார்ந்த பணி என்பதினால் உங்களது செயல்கள் அனைத்தும் எங்களை மிகவும் கவர்ந்தது . எனவே இந்த வேலை உங்களுக்கு தான் என்றார். 


தர்ஷனுக்கு  உடனே தன் அப்பாவின் நினைவு வந்தது. 

பணி ஆணையை எடுத்துச் சென்று அப்பாவின் கரங்களில் கொடுத்து அவரது பாதங்களை வணங்கி 

கண்ணீர் ததும்ப அவரை தழுவினான் தர்ஷன்.


கதை சொல்லும் பாடம்:  பெரியவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகள் பிள்ளைகளுக்கு கோபமும்  வெறுப்பும் தந்தாலும் ஒழுக்கமான வாழ்க்கை நன்மையே விளைவிக்கும் வகையில் எல்லாவித சிறப்புக்ககளும் தரும்.


நேராகத் தோன்றிடினும்

அம்பு கொடியது. 

வளைவுடன் தோன்றினாலும் யாழின் 

கொம்பு நன்மையானது.

மக்களின் பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.


இதைத்தான் வள்ளுவர் இப்படிக் கூறியுள்ளார்:


கணைகொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங் கன்ன

வினைபடு  பாலால் கொளல்.


(திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள் கதைகள் நிகழ்வில் பங்கேற்று எழுதிய சிறு கதை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்