- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 14 :
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனை பாடலோர் எம்பாவாய்.
பொருள் :
உங்கள் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் தேங்கி உள்ள நீரில் சிவந்த அழகிய ஆம்பல் மலர்கள் குவிந்திருந்த தங்களின் வாயை திறந்து, மலர்ந்து விட்டன. காவி உடையணிந்த துறவிகள் தங்களின் வெண் பற்கள் ஒளிவீச கோவில்களை நோக்கி, திருச்சங்கினை முழங்கி ஒலி எழுப்புவதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என வீரமாக பேசிய பெண்ணே, கொடுத்த வாக்கினை மறந்து விட்டு, இப்படி வெட்கம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனை, தாமரை போன்ற விரிந்த அழகிய சிவந்த கண்களை உடைய கண்ணனை பாட இன்னும் எழுந்திருக்காமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கிறாயே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}