-ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 19 :
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
பொருள் :
குத்து விளக்கு எரிய, யானை தந்தத்தால் செய்யப்பட்ட கட்டிலின் மேல் போடப்பட்ட மென்மையான பஞ்சு மெத்தையில், விரிந்த கொத்தான பூ சூடிய கூந்தலை உடைய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடி, தன்னுடைய மார்பில் பலவிதமான மலர் மாலைகளை அணிந்து தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனே! நீ எங்களுடன் வாய் திறந்து பேசும். மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன்னுடைய கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், அவனை ஒரு நூலிழை நேரம் கூட பிரிந்திருக்க நீ விரும்ப மாட்டாய். இது உன்னுடைய குணநலன்களுக்கு ஏற்ற தகுதியான செயல் ஆகாது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}