- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 4:
ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
மழையின் கடவுளாக விளங்கும் கண்ணனே! உன்னுடைய தாராள வள்ளல் போன்ற தன்மையை மறைத்து வைக்காதே. கடலுக்கள் புகுந்து அங்கிருக்கும் நீரை பருகி கொண்டு மேலே ஏறி, மேகமாகி, பிரளய காலத்திலும் காக்கும் ஒருவனாக இருக்கும் எங்கள் தலைவனாகிய கண்ணனின் திருமேனியை போல் கருமை நிறமாக மாறி, அழகிய தோள்களை உடைய பரந்தாமனின் வலது கரத்தில் இருக்கும் சக்கரம் போன்ற மின்னல் மின்ன, இடது கரத்தில் இருக்கும் திருச்சங்கினை போல் இடி முழங்கி, சாரங்க வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகளை போல் சரம் சரமாக மழையை பொழிந்திடு. உனது மழைக் கொடையினால் இந்த உலகம் பிழைக்க வேண்டும். நாங்களும் மகிழ்ந்திடுவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}