- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 7:
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
பொருள் :
குருவிகள் எழுப்பும் கீச்கீச் என்ற சத்தம் உனக்கு கேட்கவில்லையா, பேய் போல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணே? நறுமணம் வீசும் கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மத்துகளைக் கொண்ட தயிர் கடையம் ஓசையும், அப்போது அவர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் பல விதமான அணிகலன்களும், கை வளையல்களும் எழுப்பும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? அனைவரையும் தலைமை தாங்கி அழைத்து சொல்வதாக சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணனா, கேசவா என புகழ்ந்து பாடுவது கூட உன்னுடைய காதுகளில் கேட்காமல் இப்படி ஆழ்ந்து தூங்குவதன் மர்மம் என்ன? ஒளி வீசும் முகத்தை உடைய பெண்ணே உன்னுடைய வீட்டின் கதவை திறந்த வெளியே வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}