- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 8 :
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.

பொருள் :
கிழக்கில் வானம் பொழுது விடிய துவங்கி விட்டது. எருமைகள் மேய்ச்சலுக்காக தோட்டங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விடும். உன்னை விட்டு கோவிலுக்கு செல்ல முற்பட்ட மற்ற தோழிகளை தடுத்து அழைத்து வந்துள்ளோம். தோழிகள் அனைவரும் வந்து உன்னை அழைத்துச் செல்வதற்காக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காதுகளில் பெரிய தோடுகளை அணிந்தள்ள பெண்ணே, எழுந்து வா. குதிரையாக வந்து கேசி என்னும் அசுரனை வாயை பிளந்து வதம் செய்தவன், அசுரர்கள் பலரை வீழ்த்திய தேவர்களுக்க எல்லாம் தலைவனாக இருப்பவன் நம்முடைய கண்ணன். அவனை வழிபட்டு வணங்கினால் நமக்கு என்னென்ன குறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து கண்டறிந்து அவை அனைத்தையும் நீக்கி, நமக்கு அருள் செய்திடுவான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}