- அ.சீ. லாவண்யா
முருகன் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது மலைகள் தான். முருகன் குறிஞ்சி நில கடவுள் ஆவார். முருகா என்று சொல்லும் போதே நம் மனம் மகிழ்ச்சி தரும். காரணம் நம் அனைவரின் உள்ளத்தில் முருகன் குடியிருக்கிறார்
"சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா.. உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா" இப்பாடல் வரிக்கு ஏற்ப நம் உள்ளமானது முருகா என்று சொல்லும் தருணத்தில் தேன் போல மகிழ்ச்சி பொங்குகிறது.
திருத்தணியின் தல வரலாறு
திருத்தணி (Thiruthani) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்று. இங்கு மலையின் மேற்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் உயர்ந்த ஆன்மீக சக்தி நிலையமாக கருதப்படுகிறது. திருமாலின் அவதாரமான ஏகாம்பரநாதர் வழிபட்ட தலமாகவும் இது குறிப்பிடப்படுகிறது
திருவிழாக்கள்
திருத்தணி முருகன் கோவில் மிகப்பெரிய திருவிழாக்களுக்குப் பெயர் போனது.
1.தைப்பூசம்
2.ஸ்கந்தஷஷ்டி
3.கந்த சஷ்டி திருவிழா
4.பங்குனி உத்திரம்
ஆடி கிருத்திகை மிகுந்த வைபவத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று பக்தர்கள் காவடி எடுத்து முருகனுக்கு விரதம் இருந்து முருகனுக்கு காவடிகளை செலுத்துவர்கள். அன்று திருத்தணி கோவில் திருவிழா போலே காட்சி அளிக்கும்.
முருகன் தன்னை நாடி வரும் பக்தர்களை என்று கை விடமாட்டார். நம்பிக்கையின் ஆதாரம் நம் தமிழ் கடவுள் முருக பெருமான். நாம் அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தல் அவர் நமக்கு ஆயிரம் படிகள் எடுத்து வைப்பார். வாழ்க்கையில் வெற்றியை மட்டும் காட்டுவார்.
வாழ்வில் திருப்பம் தரும் திருப்புகழ்
மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் வெற்றி பெற பாட வேண்டிய திருப்புகழ்
அற்றைக் கிரைதேடி அத்தத்..திலுமாசை பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா சுற்றுற் றுணர்போதா கச்சிப் பெருமாளே.
குழந்தை பாக்கிய தரும் திருப்புகழ்
செகமாயையுற்றெ னகவாழ்வில் வைத்து திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி
மகவாவினுச்சி ழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி
'மடிமீதடுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதர்
'முதுமாம றைக்கு ளொகுமாபொ குட்குள் மொழியேயு ரைத்த
தகையாதெ னக்கு வடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே
"தருகாவிரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே.
திருமணம் கைக்கூடும் திருப்புகழ்-
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்க.. தனாலே மால்கொண்ட பேதைக்குள். மணநாறும் மார்தங்கு தாரைத்தந்... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண்.... பெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங்... குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும்... பெருமாளே.
*பிணியை தீர்க்கும் தீருப்புகழ்
இருமது ரோக முயல்கள் வாத மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள் மாலை யிவையோடே
பெருவயி றிளை யெரிதலை சூலை பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைதலி யாத படியுன் தாள்கள்....அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே
கருநிழல் மீதி துறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா
சலயிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே
வாழ்க்கையில் திருப்புகழ் பின்பற்றி முருகன் அருளை பெறுவோம்.
திருத்தணி என்ற பெயர் எப்படி பிறந்தது? - சுருக்கமான வரலாறு
ஏன் "திரு + தணி" என்று அழைக்கப்பட்டது?
திருத்தணி என்பது முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்தப் பெயருக்கு பல புராண, வரலாற்று அர்த்தங்கள் உள்ளன. திருமகன் 'தணிவுற்ற' இடம் - அதனால் "திருத்தணி". இடும்பை, சூரபத்மன் போன்ற அசுரர்களை வென் வந்த முருகன், போரின் சூடு, கே அனைத்தும் "தணிந்த" அமைதியான புனித மலை முருகன்-வள்ளி திருமண இடம்.
புராணங்களின்படி முருகன்-வள்ளி கல்யாணம் நடைபெறும் தலமாகவும் கூறப்படுவதால் "திரு தணை"..திரு தணை (திருமண தலம்) - பின்னர் திருத்தணி என்று மாற்றம்.
தீரா கவலைகளும் பறந்து போகும் திருத்தணி முருகனை தரிசித்தால். வாழ்க்கையில் திருப்பம் பெருவீர் அனைவரும் நலமுடன் இருப்பீர்.
திருத்தணி முருகன் வழி துணை வருவான்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கட்டுரை + புகைப்படம்: அ.சீ.லாவண்யா
(அ.சீ.லாவண்யா திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
நிலவிலிருந்து சாம்பிள் எடுக்கத் திட்டம்.. சந்திரயான் 4 குறித்து இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
வேலின் விழி திறப்பது திருத்தணியில்!
Gold price:தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றை முழு விபரம் இதோ!
சோமாவாரத்தில் பிறந்த கார்த்திகை மாதம்.. மிக மிக விசேஷம்!
தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை.. வான்மழை மட்டுமல்ல.. ஆன்மீகமும் பொழியும் மாதம்!
{{comments.comment}}