- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 19 திருவெம்பாவை பாசுரம் 19 : உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
திருவெம்பாவை பாசுரம் 19 :
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பொருள் :
உன் கையில் ஒப்படைக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என ஒரு தந்தை தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் போது மணமகனிடம் சொல்லுவது பழங்காலமாக சொல்லப்பட்டு வரும் மொழியாக இருந்து வருகிறது. அதனால் எங்களுக்கு வரப் போகும் கணவர் எப்படி இருப்பாரோ என்ற அச்சம் காரணமாக சிவ பெருமானே உன்னிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கிறோம். எங்களை மணம் முடிப்பவர் உன்னுடைய பக்தராக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் எனக்கு மட்டுமே தொண்டு செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவளாக இருக்க வேண்டும். எங்களின் பார்வையில் உனக்கு தொண்டு செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். அதை தவிர வேறு எதையும் எங்களின் கண்கள் பார்க்க கூடாது. இந்த பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாய் என்றால் அதற்கு பிறகு சூரியன் எந்த திசையில் உதித்தால் என்ன என எந்த கவலையும் இல்லாமல் நாங்கள் இருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா? இதோ வானிலை கொடுத்த அப்பேட்!
விஜய் பிரசாரம்... ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை
வேலூர் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்
OVERCOMING STRUGGLES.. சவால்களை நொறுக்கி.. சாதனைகளைப் படைப்போம்!
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
{{comments.comment}}