கலிபோர்னியா: உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க். போர்ப்ஸ் வெளியிட்டுள்ள டேட்டாக்களின்படி அவரோட சொத்து மதிப்பு 409 பில்லியன் டாலர். ஆனா, அவர் மத்த பணக்காரங்க மாதிரி ஆடம்பரமா வாழ்றது இல்ல. Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் CEO-வான Elon Musk, தனக்கு நிறைய பணம் இருந்தும், அதை ஆடம்பரத்துக்காக செலவு பண்றது இல்லன்னு சொல்லிருக்காரு.
பெரும்பாலான பணக்காரங்க பெரிய பங்களா, விலையுயர்ந்த சாப்பாடு, காஸ்ட்லியான கார்னு செலவு பண்ணுவாங்க. ஆனா, எலான் மஸ்க், ரொம்ப எளிமையான வாழ்க்கை வாழவே விரும்புறாரு. அவர்கிட்ட அதிகமா எதுவும் இல்ல. 2020 மே மாசம் Twitterல ஒரு பதிவு போட்டாரு. அதுல நான் என்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் விக்கப்போறேன். எனக்குன்னு வீடு எதுவும் இருக்காதுன்னு சொல்லிருந்தாரு. "நம்மகிட்ட நிறைய பொருள் இருந்தா, அது நம்மள ஒரு மாதிரி அழுத்தும். அது ஒரு தொல்லை மாதிரி"ன்னு சொல்லிருக்காரு மஸ்க்.
ஆடம்பர வாழ்க்கை வாழ வசதி இருந்தும், அதுல அவருக்கு விருப்பம் இல்லன்னு பல வருஷமா சொல்லிட்டு இருக்காரு. அவர் எதையெல்லாம் வாங்க மாட்டேன்னு சொல்லிருக்காருன்னு பார்ப்போம். 2020ல இருந்து 2021க்குள்ள Elon Musk கலிபோர்னியால இருந்த தன்னோட ஏழு வீடுகள சுமார் $100 மில்லியன் டாலருக்கு வித்துட்டாரு. அதுக்கப்புறம் டெக்சாஸ்ல இருக்கிற SpaceX பக்கத்துல ஒரு சின்ன Boxabl வீட்டுக்கு குடிபோய்ட்டாருன்னு சொல்றாங்க. அந்த வீடு வெறும் 375 சதுர அடிதான். சில studio apartment விட சின்னது. அதோட மதிப்பு $50,000 டாலர்.
ஒரு பழைய பேட்டியில், தன்னோட startup ஆரம்பிச்ச புதுசுல, fast food சாப்பிட்டு, மிச்சம் இருந்த காச பிசினஸ்ல போட்டதா சொல்லிருக்காரு எலான் மஸ்க். 17 வயசுல ஒரு நாளைக்கு வெறும் $1 டாலர்ல சாப்பாடு வாங்கி சாப்பிட முடியுமான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தாராம். Neil deGrasse Tyson கூட பேசும்போது, "அமெரிக்காவுல உயிரோட இருக்கிறது ரொம்ப ஈஸி. எனக்கு சாப்பாடு கிடைக்காம போயிட மாட்டேன். கம்ப்யூட்டர் இருந்தா போதும், ஒரு சின்ன ரூம்ல கூட நான் நல்லா இருப்பேன்"னு சொல்லிருக்காரு.
Google நிறுவனத்தை ஆரம்பிச்ச Larry Page ஒருமுறை Elon Musk அவர்கிட்ட தங்க இடம் இல்லாம இருந்தப்ப, தன்னோட வீட்ல தங்க வெச்சிருக்காரு. 2022ல "எனக்குன்னு இப்ப இடம் கூட இல்ல. நான் நண்பர்கள் வீட்லதான் தங்கிட்டு இருக்கேன்"னு சொல்லிருக்காரு.
Elon Musk ஓட முன்னாள் பார்ட்னர் Grimes ஒருமுறை Vanity Fair பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், எலான் மஸ்க் சில நேரம் வறுமை கோட்டுக்கு கீழ வாழ்ந்திருக்காருன்னு சொல்லிருக்காங்க. 2022 மார்ச்ல அவங்க பேசும்போது, "அவர் ஒரு பில்லியனர் மாதிரி வாழல. சில நேரம் வறுமை கோட்டுக்கு கீழ இருக்கிற மாதிரி வாழ்றாரு"ன்னு சொல்லிருக்காங்க. ஒரு தடவ $40,000 டாலர் மதிப்புள்ள ஒரு வீட்ல இருந்தாங்களாம். அங்க செக்யூரிட்டி கூட இல்ல. மெத்தையில ஒரு பெரிய ஓட்டை இருந்ததாம். மெத்தைய மாத்தாம, "நம்ம இடத்தை மாத்தி படுத்துக்கலாம்"னு எலான் மஸ்க் சொன்னாராம்.
எலான் மஸ்க் ஒருமுறை $1 மில்லியன் டாலர் மதிப்புள்ள McLaren F1 கார வாங்கி, அத ஓட்டி காட்டும் போது விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுக்கு insurance கூட இல்லன்னு அப்புறமா கூறினார். அந்த கார அவர் திரும்ப வாங்கல. இப்ப Tesla கார் தான் அதிகமா ஓட்டுறாரு.
உலகப் பெரும் பணக்காரர்களில் சிலர் இப்படியும் இருக்கத்தான் செய்றாங்க.. ஆனால் நம்ம ஊருல சாதாரண கவுன்சிலர்கள் சிலர் செய்யும் அட்டகாசமெல்லாம் இருக்கே.. அப்பப்பா!
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}