- - மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
திருவாரூர் - திருத்துறைப்பூண்டிக்கு இடையில் உள்ள ஆலத்தம்பாடிக்கு அருகில் பொன்னிறை என்னும் கிராமத்தில் புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்க விழாக்களில் ஒன்றாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றடி அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.
இந்த கோவில் மாரியம்மன் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக காணப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த கோவில் திருவிழா பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தங்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் உடல் நலம் நன்றாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு சேவக் கோழியை அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் & பூ வைத்து தலையை சுற்றி விடுகிறார்கள். டுத்த நாள் திங்கட்கிழமை அன்று தீமிதித்தல் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக நடைபெறுகிறது .

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாவிளக்கு மாவு அம்மனுக்கு செய்து வணங்குகிறார்கள் .
இன்று ஏராளமான மக்கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம், நாக தோஷம் நீங்குவதற்கு உயிர் சேவல் காணிக்கை செலுத்தப்படுகிறது. கொடிய நோய் அல்லது உயிர்க்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் புற்றடி மாரியம்மனிடம் நன்றாக வேண்டும் என வேண்டிக் கொண்டு பாடை கட்டி அவர்களை உயிருடன் அழைத்துச் செல்கிறார்கள்.
இன்று சிறப்பு தரிசனம் ரூ.50 டோக்கன் எடுத்து சாமியை விரைவில் பார்க்கலாம்.ஏராளமான மக்கள் நெடு வரிசையில் நின்று பொறுமையாக அம்மனைப் பார்க்க தரிசனம் செய்கிறார்கள். அதிக காவல் துறை பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. டாட்டா ஏசியில் வாழை பழங்கள் கூவி கூவி ஏலமாக விற்பது சிறப்பாக நடைபெறுகிறது.
பல வகையான உணவுப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள் ,கைவினைப் பொருட்கள், பூச்செடிகள், பிளாஸ்டிக் ,பீங்கான் மற்றும் மண் பொருட்கள், அரிவாள் மனை போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. அனைத்து கடைகளும் திருவிழாக் கோலமாக காட்சி அளிக்கின்றன.

பக்தர்கள் தொலைதூர பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுகிறார்கள்.
நோய்கள் நீங்கவும், குடும்ப நலனுக்காக வழிபாடு செய்தும் அம்மனை வேண்டி வருகிறார்கள் .
அனைவரும் அம்மனின் அருள் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}