சென்னை: ஆன்மீகத்திலும், கடவுள் வழிபாட்டிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், நிறுவனருமான தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். 82 வயதான அவர் மேல்மருவத்தூர் சித்தர் பீட வளாகத்தில் உள்ள தனது இருப்பிடத்திலேயே மரணமடைந்தார். அவரது மறைவால் பக்தர்கள் சோகமாக உள்ளனர்.
பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களி்ல் இருந்து வந்த பக்தர்கள், பொது மக்கள், பிரபலங்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சக்தி பீடத்தின் அருகில் இன்று மாலை 5.30 மணிக்கு பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அவரது மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பு:
அம்மா என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சித்தர் பீடத்தின் நிறுவனர் குரு திருமிகு. பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலியைச் செலுத்துவதோடு அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் துவக்கி பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூசை செய்வதற்கு வழிவகுத்தார். ஆண்கள் மட்டுமே கோயிலின் கருவறைக்குள் நின்று பூசை செய்யமுடியும் என்கிற நெடுங்காலத்து நடைமுறையை மாற்றி பெண்களைப் பூசை செய்ய வைத்ததோடு, மாதவிடாய்க் காலத்திலும் கோயிலில் சென்று வழிபடலாம் என்கிற அவரது நிலைபாடு ஆன்மீகத் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அது வெகுவாகப் பெண்களை ஈர்த்தது மட்டுமின்றி ஆன்மீகத்திலும் வழிபாட்டிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தியது. இது பக்தியை சனநாயகப்படுத்திய ஆன்மீகப்புரட்சி என்று கூறத்தக்கதாகும். ஆன்மீகப் பணியோடு பல்வேறு கல்வி நிறுவனங்களை உருக்கி கல்விப் பணிகளையும் அவர் மேற்கொண்டார். கல்வியில் பின் தங்கியிருந்த செங்கல்பட்டு உள்ளிட்ட அப்பகுதி தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய அளவில் ஆன்மீகத்தின் ஒரு மாற்று அடையாளமாகத் திகழ்ந்தவர்; சனாதனப் பாதையைத் தவிர்த்து இந்து மதத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியவர். அத்தகைய சிறப்புகளுக்குரிய அடிகளாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவருக்கு எமது அஞ்சலியைத் செலுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}