சென்னை: சென்னையில் வசித்து வரும் பல்வேறு மாவட்ட மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாக்களில் முதன்மையானது தைப் பொங்கல் திருநாள்தான். மொத்த மாநிலமும் பொங்கல் பண்டிகையை மிக மிக சந்தோஷமாக வரவேற்கக் காத்திருக்கும். இதற்குக் காரணம், இது தமிழர் திருநாள் என்பதோடு மட்டுமல்லாமல், மொத்த சொந்தங்களையும் இந்த சமயத்தில்தான் எளிதாக காண முடியும் என்பதும் ஒன்று.

எந்தத் திருவிழாவுக்கு ஒன்று சேருகிறார்களோ இல்லையோ, பொங்கல் சமயத்தில் உறவுகள் ஒன்று கூட விரும்புவார்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அங்காளி, பங்காளி என்று அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட விரும்பும் பண்டிகை பொங்கல்தான். கிராமங்கள் களை கட்டியிருக்கும். நகரங்களிலும் கூட பொங்கல் பண்டிகை இப்போதெல்லாம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் சமயத்தில் சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்தமுறை ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்திருப்பதால் மக்கள் நேற்று முதலே கிளம்பத் தொடங்கி விட்டனர். நேற்று மாலைக்கு மேல் மக்கள் கூட்டம் திமுதிமுவென தேசிய நெடுஞ்சாலையில் படையெடுக்கத் தொடங்கியதால் தேசிய நெடுஞ்சாலையே ஜே ஜேவென காணப்பட்டது. கார்கள்தான் வழக்கம் போல அதிகமாக காணப்பட்டன.
நேற்று முதல் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதால் பஸ்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்களும் அதிகம் இயக்கப்படுகின்றன. இன்று காலையிலிருந்தே தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்வோர், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்குச் செல்வோர் என்று ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளதால் சென்னையில் வரும் புதன்கிழமை வரை கூட்ட நெரிசல் குறைந்து மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்து காணப்படும். சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களே பார்த்து பத்திரமாக ஊருக்குப் போய்ட்டு வாங்க.. சந்தோஷமாக பண்டிகையை கொண்டாடி விட்டு ஜம்மென்று திரும்பி வாங்க.. உங்களை அன்புடன் வரவேற்க காத்திருக்கு சென்னை!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}