- சந்தனகுமாரி
மூலிகைகளின் அரசி என்று சொல்லப்படுவது துளசி. இந்து மதத்தில் துளசி தெய்வீக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதை சொர்க்கத்தின் நுழைவாயில் என்றும் கடவுளிடம் நெருங்கி வந்து மோட்சத்தை அடைய உதவும் என்று கூறுகின்றனர். தினமும் குளித்துவிட்டு வந்து துளசியை வணங்குவதன் மூலம் தெய்வீக நம்பிக்கையும், செல்வ செழிப்பும் கிடைக்கும்.
துளசி செடி வீட்டில் வளர்ப்பதன் மூலம் நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கின்றது. துளசி பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் இதன் மருத்துவ பயன்பாடுகளும் அதிக அளவில் உள்ளது. வாங்க என்ன என்று பார்ப்போம்

துளசியில் விட்டமின் ஏ ,சி ,கே ஆகியவை நிரம்பியுள்ளது. இதில் இரும்பு, கால்சியம் ,மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும் இதில் நார்ச்சத்துக்களும், புரத சத்துக்களும் அடங்கி உள்ளது. தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் நம்முடைய மனதை ரிலாக்ஸ் பண்ண உதவுகிறது. துளசி செடி அருகாமையில் செல்லும்போது மண்வாசனை நம்மை வேறு எங்கோ அழைத்து செல்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.
மாலை வேளையில் துளசி செடியின் அருகாமையில் அமர்ந்து கொண்டு துளசி இலையில் தேநீர் போட்டு குடித்துப் பாருங்கள் சுவையும் அல்லும், மன நிம்மதியும் தரும். துளசி இலையை தேநீர் போட்டு குடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தினமும் துளசி இலை இரண்டு பச்சையாக சாப்பிடுவதால் எளிதில் கற்கள் வெளியேறும். உடல் வீக்கத்தை சரி செய்து குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து, நல்ல பாக்டீரியாவை உடலுக்கு கொடுக்கிறது. துளசி புற்றுநோய் அபாயத்தை குறைக்க வல்லது. இரத்த தமனிகளில் ஏற்படும் கொழுப்புகளை குறைத்து இதய நோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது.
வீட்டு வாசலில் துளசி வைத்திருப்பதன் மூலம் வீட்டிற்குள் வரும் நச்சுக்களை அழித்து தூய்மையான காற்றை தருகிறது. துளசி பூ நறுமணம் வீசக்கூடிய ஒன்றாக இருக்கிறது. போக இந்த நறுமணம் பூச்சிகளை விரட்டுவதற்கும் ஏற்றதாக உள்ளது. துளசி நிற்கும் இடத்தில் கொசு புழு, பூச்சிகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. நம் வீட்டில் அரிசி. பருப்புகளில் துளசி பூவை போட்டு வைத்தால் வண்டுகள் வராது. நல்ல வாசனையாகவும் இருக்கும். மேலும் பொடுகை போக்கி நல்ல முடி வளர செய்கிறது. முக துளசி இலையை நன்கு அரைத்து ஃபேஸ் பேக் செய்வதன் மூலம் முகம் பொலிவு பெறும்.
வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் தினமும் துளசி இலையை மென்று சாப்பிடுவதன் மூலம் எளிதில் சரியாகும். அது போக பற்கள் மற்றும் ஈறுகளை சரி செய்கிறது. மேலும் துளசி வாய் புண்களையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும் ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி சாப்பிடுவதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கின்றது
அந்த காலத்தில் அனைத்து வீடுகளிலும் துளசி மாடம் அமைத்து தினமும் காலை வீடு ,வாசல் சுத்தம் செய்து பின்னர் துளசிக்கு கோலம் போட்டு வழிபடுவர். அப்போது நம்முடைய மனதில் அமைதியும், தெய்வீக நம்பிக்கையும் அதிக அளவில் கிடைக்கும். மேலும் துளசியை மற்ற செடிகளுடன் நடக்கூடாது. கரடு முரடான இடத்திலும் நடக்க கூடாது. மக்கள் நிறைந்த செடிகள் அருகிலும் பூக்கும் செடிகள் அருகிலும் வைக்கக் கூடாது. எப்போதும் துளசியை தனியாக வைக்க வேண்டும். இப்போதுதான் அதன் விதைகள் கீழே விழுந்து அதிக அளவு செடிகளை இனப்பெருக்கம் செய்யும்.

மேலும் துளசியை தரையில் வைக்காமல் தொட்டியில் வைத்து வடகிழக்கு நோக்கி வைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் நம்மை தேடி வரும். இந்து மதத்தை பொறுத்தவரை மங்களகரமான செடி என்று சொல்லப்படுவது துளசி தான். ஏனென்றால் தெய்வீக நறுமணம் அதிகம் கொண்டது துளசியில் தான்.
விஷ்ணு பகவான் துளசி இலைகள் இல்லாமல் ஒரு பொழுதும் இருந்ததில்லை. துளசி இலைகளால் அவர் மகிழ்ச்சி அடைகின்றார். கிருஷ்ணர் கூட துளசியை தன்னைவிட ஒரு படி மேலாக நேசிக்கின்றார். மிகப்பெரிய மரியாதையும் ஆதிக்கத்தையும் கொடுத்தார். லட்சுமி தேவியின் உருவம் என்று துளசி கூறப்படுவதால் அனைவரும் வீட்டில் துளசி செடி வளர்ப்போம். அதுபோக இயற்கையாக நம்முடைய முகத்தை ஜொலிக்க வைக்க துளசி இலையை அரைத்து பேஸ்புக் செய்து முகத்தை பளபளக்க வைக்கலாம்.
துளசி இலையை கசாயம் செய்து குடிப்பதால் உடல் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குறையும். என்னை பொறுத்த வரைக்கும் காலையில் எழுந்திருச்ச உடனே துளசியின் முகத்தில் முழித்தால் அன்றைய நாள் மிகுந்த சந்தோஷத்துடனும் நிம்மதியாகவும் இருக்கும். நீங்களும் ஒருமுறை துளசியை வளர்த்துப் பாருங்க.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}