சென்னை: சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான சப்தகிரி மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி நேரமாக வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதுவும் இது கோடை காலம் என்பதால், தொடர் விடுமுறையினை முன்னிட்டு மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பி வருகின்றனர்.
இந்நிலையில்,சென்னையில் இருந்து திருப்பதி செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்- 16057) வருகிற 31ம் தேதி வரை தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் (16058) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16053) வருகிற 31ம் தேதி வரை ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், திருப்பதியில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16054) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}