வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை.. களத்தில் குதித்த இருட்டுக்கடை.. அட்டகாசமான உதவி!

Dec 18, 2023,06:54 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலியை அதிர வைத்துள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் பலரும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையின் மிக முக்கிய அடையாளமான இருட்டுக்கடை அல்வா நிறுவனம் மக்களுக்கு அருமையான உதவியைச் செய்து வருகிறது.


எதிர்பாராத வெள்ளத்திலும், இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த மழையிலும் ஸ்தம்பித்துப் போய் விட்டது நெல்லை. கம்பீரமான நெல்லை இன்று தண்ணீரில் மிதப்பது பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.


மக்களே ஒருவருக்கொருவர் அங்கு உதவி வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களே திரண்டு சென்று உதவிகளைச் செய்து வருகின்றனர். கட்சிகள், ரசிகர் மன்றங்கள், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன.




இந்த வகையில் நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடையும் களத்தில் இறங்கியுள்ளது. நெல்லை என்றாலே அல்வாதான்.. அல்வா என்றால் முதலில் அனைவரும் போய் நிற்கும் இடம் இருட்டுக்கடைதான். அத்தகையக பிரபலமான இருட்டுக்கடை தற்போது வாகனம் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறது.


வெள்ள பாதிப்பு இருக்கும் மக்களுக்கு தேவையான பிஸ்கட், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை கொடுத்து உதவுகிறது இருட்டுக்கடை. இதுதொடர்பான தேவை உள்ளோர் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் இருட்டுக்கடை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி   தேவைப்படும் நபர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்  - 6369899807 / ஹரி சிங் 9994368894. இக்கடின காலத்தை நம் அன்பால் மீட்டெடுப்போம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


மிகப் பெரிய விஷயம்.. எல்லோரும் இதுபோல ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுப்போம்.. நெல்லையை மீட்போம்.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்