திருப்பதி: 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 2.55 கோடி பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. திருப்பதி ஏழுமலையனை தரிசனம் செய்ய தினசரி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அப்போது பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகிறது.
பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென தங்கம், வெள்ளி, பணம், முடியென, காணிக்கைகளாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி முதல் புது வருட பிறப்பான ஜனவரி ஒன்று வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தத் தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் 2024 ஆம் ஆண்டில் எவ்வளவு பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2.55 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். இதில் ஒரு கோடியே 365 கோடி பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை செலுத்தி உள்ளனர். குறிப்பாக 90 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை அளித்துள்ளனர் என அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன் சேவை பதிவு கட்டணம் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதாவது வைகுண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் எத்தனை நாள் திறக்கிறதோ அத்தனை நாட்கள் பக்தர்கள் அனைவருக்கும் பொது தரிசனம் சேவை மட்டுமே வழங்கப்படுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஆனால் எத்தனை நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் முன் சேவை கட்டணமில்லாத பொது தரிசன சேவை உண்டா என்பது குறித்த விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}