பரணி தீபம் 2024 : எப்படி, எத்தனை ஏற்ற வேண்டும்.. என்னெல்லாம் பலன் கிடைக்கும்?

Dec 10, 2024,06:50 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுவது அனைவருக்கும் தெரியும். இது சிவபெருமானின் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்துவதற்காக ஏற்றப்படுவதாகும். பரணி தீபத்தன்று ஐந்து தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். இத சிவ பெருமானின் காத்தல், அழித்தல், படைத்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து முகங்களின் குணங்களையும், ஐந்து தொழில்களையும் குறிப்பதாகவும் சொல்லப்படுவது உண்டு.


அதனால் தான் சிவபெருமானை நினைத்து நாம் 5 மண் அகல் தீபங்களை நம்முடைய வீடுகளின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது. 


பரணி தீபம் பலன்கள் :




நாம் எதையும் காரண காரியம் இல்லாமல் செய்ய மாட்டோம் இல்லையா? அதனால் பரணி தீபம் ஏற்றுவதால் நம் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். நமக்கும் அதீத நன்மை கிடைக்கும். நம் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை உண்டாகும். 


பரணி தீபம் ஏற்றும் முறை :


பஞ்ச பூத நலன்களை தரும் இந்த பரணி தீபத்தின் 5 தீபங்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாலம் எடுத்து அதில் கோலமிட்டு, அனைத்து திசைகளையும் பாத்தபடி வட்டமாக பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் தனியாக இந்த 5 தீபங்களையும் ஏற்ற வேண்டும்.


கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று,அதாவது திருக்கார்த்திகை திருநாளுக்கு முந்தைய நாள் வீடுகளில் ஏற்றப்படுவதே பரணி தீபம் ஆகும். இந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 08.20 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 06.50 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. எனவே டிசம்பர் 12ம் தேதியன்று மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.


சிலர் வீடுகளில் அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வீட்டில் வாசல், ஹால், பூஜை அறை, வீட்டின் பின்புறம் என அனைத்து இடங்களிலும் ஏற்றலாம். ஆனால் குறைந்த பட்சம் 5 தீபங்கள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாளில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து வகையான தீபங்கள் ஏற்றப்படும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்