சென்னை : சட்டசபையில் கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என கவர்னர் மாளிகை வெளியிட்ட தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவங்கியது. இதில் கவர்னர் ரவி உரை நிகழ்த்தும் போது பல முறை அவரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கவர்னர் ரவி, உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு, சட்டசபையில் இருந்து வெளியேறினார். பிறகு சட்டசபையில் என்ன நடந்தது, எதற்காக கவர்னர் அவையில் இருந்து வெளியேறினார் என விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, "அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா?"
அரசு தயாரித்து கொவுத்த அறிக்கையை வாசிப்பது கவர்னரின் கடமை. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் இவ்வாறு உரையை வாசிக்காமல் செல்ல முடியுமா? கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என கூறி இருந்தார். கவர்னர் மாளிகையின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ரகுபதியும், கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். கவர்னர் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. பாஜக பிரதிநிதி போல கவர்னர் செயல்பட்டார். எதிர்க்கட்சிகள் கூறாத குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறுகிறார், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி பற்றி கவர்னர் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என சட்டசபை வளாகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}