சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழக தேர்தலுக்கான பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இந்த பட்டியலை இன்று வெளியிட உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இதில் பாஜக.,வுக்கு மொத்தம் 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ஒதுக்கீடாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 27 தொகுதிகளில் பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிக்கப்பட்டுள்ளது. இதில் சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிடுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே தெரிவித்து விட்டார். அதனால் பாஜக போட்டியிடும் மீதமுள்ள 26 தொகுதிகள் மற்றும் அவற்றிற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அதே போல் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை சென்னை மயிலாப்பூர் தொகுதியில் துவங்கிய போது, அவருடன் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகிறார் என்ற பேச்சும் அடிபட்டது. ஆனால் அது பற்றி அவரோ, கட்சி சார்பிலோ எந்த தகவலும் வெளியிடவில்லை.
பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்காக பியூஸ் கோயல் இன்று சென்னை வருகிறார். இன்று காலை அவர் சென்னை வந்ததும், பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார். ஏற்கனவே கடந்த முறை பாஜக போட்டியிட்ட சில தொகுதிகளில் இந்த முறை கூட்டணி கட்சியான அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக.,வின் தற்போதைய எம்எல்ஏ.,க்களின் தொகுதிகள் இந்த முறை மாறுகிறது.
பாஜக.,விற்கு ஒதுக்கிய புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக திரும்ப கேட்டதாகவும், அதிமுக.,விற்கு ஒதுக்கிய தொகுதிகள் சிலவற்றை பாஜக தங்களுக்கு வேண்டும் என கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் அண்ணாமலை போன்ற சில முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட போவதில்லை என சொன்னதாகவும், அவர்களை சமாதானப்படுத்தும் வேலைகள் நடைபெற்றதாகவும் சொல்லப்பட்டது. இது போன்ற பல்வேறு காரணங்களாலும், பாஜக வெற்றி பெற சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, அந்த தொகுதிகளில் செல்வாக்குமிக்க வேட்பாளர்களை கண்டறிந்து வந்ததாலும் தான் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}