சென்னை: தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக நேற்று மாலை திடீரென ஒரு செய்தி வாட்ஸ் ஆப்களில் பரவியது. ஆனால் அது வதந்தி என்று தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்தது. கொரோனா வந்ததற்குப் பிறகு இந்த ஓய்வு வயதானது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதுவே அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறையும், 60 வயது வரை அனைவராலும் திறம்பட பணியாற்ற முடியாது, பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக இது கூறப்பட்டது. இருப்பினும் இந்த உத்தரவு தற்போது வரை நீடிக்கிறது.
60 வயது வரை ஓய்வு வயது நீட்டிக்கப்பட்டதால் தற்போது அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்தக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது. வாட்ஸ் ஆப்களில் இது காட்டுத் தீ போல பரவியது. பெரும்பாலும் குரூப்களில்தான் அதிகம் இது பரப்பப்பட்டது.

இது முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் ஃபேக்ட் செக் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது கூறுகையில், இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் பேக்ட் செக் தெரிவித்துள்ளது.
வதந்தி கிளப்பியது யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}