சென்னை: நீங்கள் அரசு பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்து விட்டீர்கள் என்றால் கவலைப்படாதீர்கள். உங்களது சில்லறை பாக்கியை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல், UPI மூலம் பெறலாம். அதற்காக தமிழக அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்கு இலவச பஸ் வசதி, நான் முதல்வன் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களிடம் பேராதரவை பெற்றுள்ளன. இது தவிர தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேருந்து வசதிகளை மேம்படுத்தி உள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு.
சென்னையில் நடந்து வரும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட இந்தத் திட்டங்களால்தான் மக்கள் ஆதரவு திமுகவுக்கு அதிகமாக கிடைத்துள்ளதாக கூட சில முக்கிய தலைவர்கள் பேசியதாக செய்திகளும் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் ஒரு பிரச்சினைக்கு சூப்பரான தீர்வுத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அது வேறு ஒன்றும் இல்லை, பஸ்களில் தினசரி சந்திக்கும் சில்லறைப் பிரச்சினைதான். மாநகரப் பேருந்துகளில் ஏறும்போதே சில்லறையுடன் பயணியுங்கள் என பொதுமக்களிடம் பேருந்து நடத்துனர்கள் கறாராக பேசுவதுண்டு. இது தொடர்பாக பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே சண்டை நடக்காத நாளே இல்லை. நீண்ட காலமாகவே இந்தப் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மீதி சில்லறையை நடத்துனர்கள் சரியாக கொடுக்க மறுக்கின்றனர் என பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.
இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. மாநகரப் பேருந்துகளில் ஏறும் பயணிகளிடம் பயண சீட்டிற்கு சில்லறையாக கொடுக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என ஏற்கனவே உத்தரவு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது இன்னொரு சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அது என்ன சூப்பர் திட்டம் அப்படித்தானே கேக்குறீங்க. வாங்க அதை பற்றி பார்ப்போம்.
நீங்க மாநகர பேருந்துகளில் ஏறி விட்டு சில்லறை வாங்க மறந்துட்டீங்களா.. நோ டென்ஷன்.. நோ கவலை.. உங்க செல்போனை எடுங்க அதுல 1800 599 1500 என்ற டோல் ஃப்ரீ நம்பரை டயல் செய்யுங்க. அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்து அனுப்பினால் , யூ பி ஐ (UP) மூலம் உங்களது சில்லறை பாக்கியை ஈஸியாக பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு ஒரு சில சின்ன கண்டிஷன். உங்க பயணச்சீட்டை பேருந்தில் இருந்து இறங்கியவுடன் கீழே போட்டு விடாதீர்கள். பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் சில்லறையைப் பெற முடியும். ஏனெனில் பாக்கி சில்லறையை வாங்குவதற்கு, உங்கள் பயண சீட்டு விவரங்களை தான் டோல் ஃப்ரீ எண்ணில் பதிவிட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
சூப்பர்ல!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}