எங்கு பார்த்தாலும் புகார்.. அரசு பேருந்துகளில் உள்ள பழுதுகளை.. 48 மணி நேரத்தில்.. சரி செய்ய உத்தரவு!

Apr 27, 2024,05:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் பழுது குறித்து தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில், அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்யவும், பழுதுகறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


48 மணி நேரத்தில் ஆய்வு செய்ததில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்து அறிக்கை அனுப்பவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் முருகேசன் (54) ஓட்டிச் சென்றார். அப்போது பேருந்து ஒரு வளைவில் திரும்பும் போது இருக்கையுடன் முருகேசன் வெளியே வந்து விழுந்தார்.  இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்தனர்.




அதேபோல சமீபத்தில் ஒரு அரசுப் பேருந்தின் படிக்கட்டு முழுமையாக கழன்று விழுந்தது. அதை அந்தப் பஸ்சின் கண்டக்டர் கஷ்டப்பட்டு தூக்கிச் சென்று சரி செய்த புகைப்படம், வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. இப்படி அடிக்கடி பல்வேறு புகார்கள் எழுகின்றன.  தமிழக அரசு அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்தது வந்தது.


இதுதவிர அரசு  பேருந்துகளில் சீட்டுகள், படிக்கட்டுகள் உட்பட முறையாக பராமரிக்கவில்லை என தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்த நிலையில் தமிழக அரசு பேருந்துகள் முறையாக ஆய்வு செய்வது தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் பனீர் ரெட்டி மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேற்று சென்னை தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.


இந்த நிலையில் தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.48 மணி நேரத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் ஏதும் இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யவும், ஆய்வுகள் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்