தர்மபுரி மாணவர்களே.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்.. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி.. கலக்க ரெடியா!

Aug 14, 2024,03:22 PM IST

தர்மபுரி:   தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும்  20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் புதல்வன் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் மாணவர்களின் தனித்திறமையை வெளிக் கொண்டுவரும்  நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 




இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசு தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 


அந்த வரிசையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்த தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிகள் வரும் 20.8.2024 மற்றும் 21.8.2024 ஆகிய  தேதிகளில் நடைபெற உள்ளது. 


இதில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும் எனவும் மேலும், போட்டியில் வெல்லும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக  மாவட்ட ஆட்சியர் சார்பில் ரூ.2000 பரிசுத்தொகையாக வழங்கப்படும் என‌வும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்