சென்னை : தமிழகத்தில் உள்ள மிக பழமையான, 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான, பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த 65 கோவில்களில் ஜூலை 12ம் தேதியான நாளை ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் இத்தனை பழமையான கோவில்களிலும் கும்பாபிஷேகமா என பலரும் ஆச்சரியம் தெரிவத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஒரு நல்ல காரணம் பின்னணியில் உள்ளது.
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பில் ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமையான நாளை தமிழகத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சாத்தனஞ்சேரி கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான தக்கோலம் கங்காதீசுவரர் கோவில், நெல்லை மாவட்டத்தில் 123 ஆண்டுகள் பழமையான அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சாமி கோவில், வேலூர் மாவட்டத்தில் 110 ஆண்டுகளுக்கு பழமையான் வெட்டுவானம் திரவுபதியம்மன் கோவில், சங்ககிரி செளந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவில்,100 ஆண்டுகள் பழமையான 5 கோவில்களிலும், 90 ஆண்டுகள் பழமையான 3 கோவில்கள், 70 ஆண்டுகள் பழமையான 2 கோவில்கள், 50 ஆண்டுகள் பழமையான 15 கோவில்கள், 40 ஆண்டுகள் பழமையான 10 கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
ஜூலை 12 ம் தேதி இத்தனை கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் வெள்ளிக்கிழமை என்பதால் கிடையாதாம். ஜூலை 12ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த, தெய்வீக சக்தி வாய்ந்த நாளாகும். இது ஆனி மாதம் உத்திர நட்சத்திரமும் சஷ்டி திதியும் இணைந்து வரும் நாளாகும். ஆனி மாத உத்திரத்தில் தான் சிவ பெருமானின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரூபமான ஆடல் அரச பெருமானான, சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேகம் நடத்தப்படும். நடராஜருக்கு நடத்தப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்களில் ஒன்று ஆனி மாத உத்திரத்தில் நடத்தப்படுவது.
தேவர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் நாளாக ஆனி உத்திரம் கருதப்படுவதால், தெய்வ அபிஷேகங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடுவார்கள் என்பது ஐதீகம். இதனால் அங்கு கூடுபவர்களுக்கு சிவன், முருகன், தேவர்கள் ஆகிய அனைவரின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால்தான் இந்த நல்ல நாளில் இத்தனைக் கோவில்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}