சென்னை: தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது. யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கொரோனாவைரஸ் பரவி வருகிறது. தற்போது பரவி வரும் வைரஸ் வகையானது, எளிதில் தொற்றக் கூடியது. பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்துவதாக இது இல்லை. எனவே இந்த வகையான தொற்று ஏற்பட்டால் சில நாட்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, ஜலதோஷம் உள்ளிட்டவை இருக்கும். உரிய மருந்துகளை எடுத்துக் கொண்டால் சரியாக விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா பரவல் அச்சம் மக்களிடம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களை சந்தித்த தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 1800க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்ப கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றம் அடைந்து வந்ததன் காரணமாகத் தான் 2023 மே 5ஆம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது. தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த ஆய்வில் இவை வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் என்பது உறுதியாகி உள்ளது. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடன் ஒரு சுற்று அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுருத்தி உள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது பதற்றம் வேண்டாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால் மாஸ்க அணிவது நல்லது. இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பான மருத்துவமனை கட்டமைப்பு உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் தயாராக உள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தல் வழக்கமான ஒன்றுதான். பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா தொடர்பான வதந்திகள் தான் மிகப்பெரிய நோய். இந்த வதந்திகளை கிளப்பாமல் இருப்பது நல்லது. சென்னையில் கொரோனாவால் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த முதியவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்தன என்று தெரிவித்துள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}