விஜய்க்கு எதுக்கு தனிக்கட்சி.. பேசாம திமுக அல்லது காங்.கில் சேர்ந்திருக்கலாமே.. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Oct 03, 2024,06:10 PM IST

ஈரோடு: விஜய் எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவும் இருக்கிறார். அவர் ஏன் கட்சி ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. நீட் எதிர்ப்பு எல்லாம் பேசும் அவர் காங்கிரஸிலோ அல்லது திமுகவிலோ இணைந்திருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அன்று முதல் தனது கட்சியின் வளர்ச்சிப்பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சிக்கொடி மற்றும் கட்சியின் படல்களை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 27ம் தேதி கட்சியின் மாநாட்டை நடத்த திட்டம் தீட்டி அதற்கான பணிகளை செய்து வருகிறார். 



இந்நிலையில்,  ஈரோட்டில் மத்திய பேருந்துநிலையம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தில் மது கடைகளை மூடினால் பாதிக்கப்படும் பெயர்களில் முதலில் சீமான் பெயர் தான் இருக்கும். அவர் பாதிக்கப்படக்கூடாது என்ற அக்கறை எங்களுக்கு உள்ளது.

மதுவிலக்கை ஒரு மாநிலத்தில் மட்டும் செய்துவிட முடியாது.  முழுமையான மதுவிலக்கு வேண்டுமென்று சொன்னால் மக்கள் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்ந்து திருந்தினால் மட்டுமே மதுவிலக்கு முழுமையாக கொண்டு வர முடியும். மதுக்கடைகளை அதிகமாக மூடினால் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும். சாராயம் குடித்து பழகியவர்கள் 80 சதவீதம் பேர் அடிமையாக உள்ள நிலையில் சாராயம் கொடுக்கவில்லை என்றால் மனம் உடல்நிலை கெட்டு போய்விடும். கடுமையான பிரச்சாரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி முயற்சி செய்ய வேண்டும். மதுவிலக்கு என்று சொல்லும் குஜராத், பீகார் மாநிலத்தில் சாராயம் ஆறு போல ஓடிக் கொண்டு இருக்கிறது.

விஜய் எல்லோர் வீட்டுப் பிள்ளையாகவும் இருக்கிறார். அவர் ஏன் கட்சி ஆரம்பித்தார் என்று தெரியவில்லை. நீட் எதிர்ப்பு எல்லாம் பேசும் அவர் காங்கிரஸிலோ அல்லது திமுகவிலோ இணைந்திருக்கலாம். எதற்காக தனி கட்சி ஆரம்பித்துள்ளார். ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன், டி.ராஜேந்தர், கருணாஸ் எல்லாம் கட்சி ஆரம்பித்து வீட்டுக்கு போய்விட்ட  நிலையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது தேவையற்ற ஒன்று என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

அதிகம் பார்க்கும் செய்திகள்