சென்னை: தமிழ்நாடு முழுவதும் 90 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் குரூப்-1, குரூப் 2, 2ஏ,குரூப் 4, உள்ளிட்ட தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 90 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி டி என் பி எஸ் சி நிறுவனம் வெளியிட்டது. இதில் துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்புத்துறை அதிகாரி, உள்ளிட்ட மொத்தம் 90 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இன்று தமிழ்நாடு முழுவதும் குரூப் 1 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. 300 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளில், பொது அறிவு பாடத்தில் 175 கேள்விகளும், நுண்ணறிவு திறனில் 25 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும்.
தமிழ்நாடு முழுவதும் இந்த குரூப் ஒன் தேர்வு 797 மையங்களில் நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை 2, 38,247 பேர் எழுதுகின்றனர். இதில் 1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 20 பேரும் அட்கம்.
குரூப்-1 எழுத்துத் தேர்வை தொடர்ந்து முதன்மை தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}