டிஎன்பிஎஸ்சி குரூப் 5 அறிவிப்பு வந்தாச்சு.. சட்டுப்புட்டுன்னு சீக்கிரம் அப்ளிகேஷனை போடுங்க!

Oct 18, 2024,04:46 PM IST

சென்னை :   டிஎன்பிஎஸ்சி குரூப் 5 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனால் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம்.


குரூப் 5ஏ தேர்வில் மூலம் அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணிக்காக காலியாக உள்ள 35 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம். இது குறித்த விபரங்கள் இதோ...




காலி பணியிடங்கள் - 35 அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பணியிடங்கள்


கல்வி தகுதி - 1. அரசு அல்லது யுஜிசி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 2. தமிழ்நாடு அமைச்சுப் பணியில் உதவியாளராகவோ அல்லது நீதித்துறை பணியில் ஒரு உதவியாளராகவோ பணியாற்றியிருக்க வேண்டும்.


வயது வரம்பு - அதிகபட்ச வயது 35 


ஊதிய  விபரம் - இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale Level 16 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை - எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை - தகுதியான விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி.,யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள் - 15.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்