12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 16, 2025... இன்று நினைத்த காரியங்கள் கைகூடும்

Dec 16, 2025,10:07 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், மார்கழி 01ம் தேதி செவ்வாய்கிழமை

இன்று முழுவதும் துவாதசி திதி உள்ளது. மாலை 04.28 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.22 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 04.28 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையாட்களிடம் அன்பாகப் பேசி வேலைகளைச் செய்து முடிப்பார்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமண வரன்கள் ரசனைக்கேற்ப அமையும். பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பு உயரும். சிலர் தங்கள் கடைகளை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு மாற்ற நேரிடும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். வழக்கறிஞர்கள் பிரபலமடைவார்கள். அவர்களின் வழக்குகள் சாதகமாக முடியும். வெளி வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பிள்ளைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, எதிர்பார்த்த துறைகளில் சேர்வார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் உள்ள போட்டிகளைச் சமாளிப்பார்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி நல்ல பெயர் வாங்குவார்கள். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவார்கள். உடல் ரீதியான எலும்புப் பிரச்சனைகள் தீரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரிகள் மாறுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேற்றம் காண்பார்கள். சில மறைமுக அவமானங்கள் வந்து போகும். பொறுமையுடன் செயல்படுவது அவசியம். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்கள் தொடர்பான வியாபாரங்களில் லாபம் அதிகரிக்கும். உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பார்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணப் பிரச்சனைகள் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவார்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். பார்ப்பதற்கு கடினமாகத் தெரிந்தாலும், உண்மையில் பிறருக்கு உதவும் குணம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பம் இடுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது மறதி மற்றும் முன்கோபம் ஏற்படலாம். மாணவர்கள் விடைகளை அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. அலட்சியமாக இருக்க வேண்டாம். வெளியில் உண்பதைத் தவிர்க்கவும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்வீட்டில் உள்ளவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை அதிகரிக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய வாகனத்தை நல்ல விலைக்கு விற்பார்கள். பங்குதாரர்களால் உற்சாகம் அடைவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவார்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவார்கள். உறவினர்கள் சிலர் இவர்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மகரம் - மகர ராசிக்காரர்கள் பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அச்சப்பட வேண்டாம். நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயம் பெறுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் நல்ல முறையில் முடியும். வசதி வாய்ப்புகள் பெருகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடையை விரிவுபடுத்துவார்கள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். சிலர் தங்கள் கடையை புகழ்பெற்ற பகுதிக்கு மாற்ற முயற்சிப்பார்கள். சிலருக்கு வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் வேலை கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால், இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. பல காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது. யாரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!

news

100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை

news

மார்கழி திங்கள் பிறந்ததம்மா!

news

Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!

news

சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!

news

Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா த‌வெக?

news

அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

news

மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்