12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 01, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும்

Aug 01, 2025,10:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 16ம் தேதி வெள்ளிக்கிழமை

வளர்பிறை அஷ்டமி. ஆடி 3வது வெள்ளி. காலை 05.49 வரை சப்தமி திதியும் பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று நாள் அதிகாலை 02.16 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 02.16 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.02 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.45 முதல் 02.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே சிக்கனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 


ரிஷபம் - வியாபாரம் செழிப்பாக இருக்கும். வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெற்றோர்கள் குணமடைவார்கள். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விற்பனையாளர்கள் சாதுர்யமாக பேசி விற்பனையை அதிகரிப்பார்கள்.


மிதுனம் - பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள். கடன் தொல்லைகள் தீரும். திடீர் பயணங்கள் ஏற்படும். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உடல் நலம் மேம்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உங்கள் துணை உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். 


கடகம் - அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு உடல் சூடு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவது நல்லது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 


சிம்மம் - வெளியூர் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண தகவல் மையத்தில் இருந்து நல்ல வரன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். திருமணம் மற்றும் கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு வரும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.


கன்னி - சகோதரர், சகோதரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. தியானம் செய்வது டென்ஷனை குறைக்கும். விரும்பிய வரன் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்தி வரும். பெற்றோர்களின் உடல் நலத்தை கவனித்துக் கொள்வது நல்லது. 


துலாம் -   பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் தாங்கள் நினைத்த இலக்கை அடைவீர்கள். காதலர்களுக்கு பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். பல் வலி வந்து போகும். வெளியூரில் அலைச்சல் அதிகமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உடல் நலத்தில் கவனம் தேவை. 


விருச்சிகம் - மனைவி வீட்டாரிடம் நல்ல உறவு ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டு நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 


தனுசு -   வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலை செய்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். உடல் பொலிவு பெறும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். 


மகரம் - இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மால் சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவிடுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு வேலைப்பளு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். எண்ணெய் வியாபாரம் லாபம் தரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள். பிள்ளைகளின் மீது கவனம் தேவை.


கும்பம் -  விற்பனை பிரதிநிதிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். கொடுக்கல் வாங்கல் சீராக செல்லும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். மூன்றாம் நபரால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை தீரும். 


மீனம் - இன்று ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. ஏனென்றால் இன்று உங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!

news

10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!

news

சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!

news

எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?

news

6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!

news

கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?

news

முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு

news

பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!

news

எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

அதிகம் பார்க்கும் செய்திகள்