தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 02 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆனி 18ம் தேதி புதன்கிழமை
ஆனி உத்திர திருமஞ்சனம். சுபமுகூர்த்த நாள். அஷ்டமி. பகல் 02.59 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று பகல் 3 மணிக்கு துவங்கி, நாளை மாலை 04.32 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.21 வரை உத்திரம் நட்சத்திரமும், அதன் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 02.21வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
மேஷம் - மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். பிரபலமானவர்களால் நன்மை ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வேலையை சீக்கிரமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமையாக இருப்பது நல்லது.
ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மேற்படிப்பு படிக்க ஆரம்பிப்பார்கள். பொது விஷயங்களில் பேசும்போது கவனமாக இருங்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு வரலாம். விட்டுக்கொடுத்து போவது நல்லது. எதிர்பாராத சந்திப்புகள் நடக்கும். மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக இருக்க வேண்டும். பழைய வீட்டை சரி செய்வீர்கள். வியாபாரிகள் முதலீடு செய்வார்கள்.
கடகம் - கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு செய்வீர்கள். பெண் ஊழியர்களை மரியாதையுடன் நடத்துவார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் உங்களை பாராட்டுவார்கள். வெளியூர் பயணம் செய்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சகோதரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். கல்யாண பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். பெண்கள் சொந்த தொழில் செய்து முன்னேறுவார்கள். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய வீட்டிற்கு குடி போவீர்கள். வெளிநாட்டு விசா கிடைக்கும். வியாபாரிகள் சிறிய தூரம் பயணம் செய்வீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம்.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி தனது தவற்றை உணர்வார். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். அண்டை வீட்டார்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். ஆனால் எளிதாக முடித்து விடுவீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். வேலையில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளியூரில் அலைச்சல் அதிகமாக இருக்கும். வங்கியில் பணம் டெபாசிட் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து போங்கள். வரவுக்கு சமமாக செலவு இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம் - மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டை விற்று புதிய சொத்து வாங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
கும்பம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
மீனம் - மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளியில் செல்வாக்கு அதிகரிக்கும். பணம் அதிகமாக வரும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். உடல் வலி நீங்கும்
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை
டேஸ்ட்டியான உணவுகள்.. உலக அளவில் இந்தியாவுக்கு என்ன ரேங்க் தெரியுமா.. அடடே சூப்பரப்பு!
120 கிலோ எடையிலிருந்து ஸ்லிம் பாடிக்கு மாறிய விஜய் சேதுபதி மகன்.. காரணம் இதுதானாம்!
அகமதாபாத் விமான விபத்து.. 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில்.. இதுதான் விமானம் விபத்துக்குள்ளாக காரணமா?
{{comments.comment}}