- கவிஞர் சிவசத்தியா, காரைக்குடி
தந்தையுடன் சிறுஅகவைப் பேதை
மழையில் மகிழ்ந்தாட
கொண்டல் பந்தக்காலாய் மழை பொழிய
கருவாவெனவும் (அமாவாசை) வெள்ளுவாவெனவும் (பௌர்ணமி)
வெய்யோன்(சூரியன்) யெனவும்
குலம் (சாதி) மதம் இனம் மொழி யெனவும் இருப்பவர்
இரப்பவரென்றும் (இரவலர்) பாராது தனதன்பை
'கூ' வுக்கு மழையாகப்
பொழிந்து செழிப்பை (வளம்) இணைக்கும் அமுத சுரபியாக (அட்சயபாத்திரம்)
நிலை (பெற்றினும்) யமைத்துக் கொள்ளும் அன்பும்
கருணையுமான தூய்மை (புனிதம்)
மாந்தருக்குள் இயல்பாய் அமைந்து விட்டால்
உணவுக்குச் சேற்றில் கால் வைத்து கால் வயிற்றுச் சோறு (கஞ்சி)க்கு கடனாளியாகிய கந்தனுக்கும்
கந்தல் துணியாவது
மிஞ்சுமே!

இரு பிடி மண்ணில் ஓர் பிடியை 'ஈ' (கொடுத்து)
உழவுக்கு ஈவு (வரமாக)த் தொடங்க (கால்கோள்)
"கூ" தனை (சகத்தினை) அழித்திடுவோமென்ற
பாரதியின் (முழக்கம்) ஓசை முற்றுப்பெறட்டும்
கனவு பலித்ததையென்னி ஆவி இன்பமடையட்டும்
குமுகாயம் மாந்தர்கள்
ஒவ்வொருவரும் தன்னிறைவுப் பெற்று
வாழ்வில் அமைதியும் அன்பும் நிறைவுற
முகிழின் மாரி (சீராகப்பெய்யும்) மழையில்
அனைவரும் இன்ப கூத்தாடி
(ஆலிங்கணம்) கட்டித் தழுவி அன்பினால் நனைவோம் வாருங்கள்!
வாலிபக் கவி மட்டுமல்ல.. அவதாரக் கவிஞரும் கூட.. மறக்க முடியாத வாலி
"தில்லை மூதூர் ஆடிய திருவடி"!
வடிகால்.. ஒரு நிமிடக் கதை (47)
Short Story: கடைசி பெஞ்ச்!
குமுகாயத்தின் மழை!
கோபம் என்ன செய்யும்?
2000 ஆண்டுகளுக்கு முன்பே.. தூங்காமல் விழித்திருந்த மதுரை!
எல்லாமே இருக்கு ஆனா!
என்னைத் தவிக்க விட்டு நீயும் எங்கே தான் சென்றாய்!
{{comments.comment}}