கோபம் என்ன செய்யும்?

Oct 29, 2026,10:46 AM IST

- வே. ஜெயந்தி


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

என்பது பழமொழி!


கோபம் கொண்ட மனிதனிடம்

என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

கோபம் கொண்ட மனம்

எதையும் சிந்திக்காது!


வாயில் வந்ததைப் பேசிவிட்டு,

பின்னர் வருந்தவும் மறந்துவிடும்!

உண்மையான நண்பர்கள்

விலகிச் செல்லும்போதுகூட,

தன் தவறை உணராமல்,

தன்னையே ஏமாற்றிக் கொள்ளும்!


கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல்,

அனைவரும் விலகிச் சென்றாலும்

கவலையில்லை என்று எண்ணி,

தன் தவறைத் திருத்த மறுக்கும்




கொஞ்சம் கொஞ்சமாக

உடலும் நலிவடைகிறது;

ஒன்றன்பின் ஒன்றாக நோய்களும் வந்து,

வாழ்க்கையே துயரமாகிறது!


உதவிக்கு ஆளின்றி,

உறவுகளும் அருகிலின்றி,

தனிமையில் வாடும் மனம்

இப்போதுதான் உணர்கிறது

கோபம் என்ன செய்யும் என்று!


திருந்திய பின்னும்

யாரும் மதிக்கவில்லை என்று

வருந்தும் வேளையில்,

கடந்த காலம் நினைவுக்கு வருகிறது!


என் ஆணவம்தான்

என்னைத் தனிமையில் நிறுத்திவிட்டது;

என் கோபம்தான்

என் உறவுகளைப் பிரித்துவிட்டது!


வேண்டாமே இந்தக் கோபம்!

வேண்டாமே இந்த ஆணவம்!

அன்புடன் அனைவரும் வாழ்வோம்;

அமைதியுடன் வாழ்க்கையைத் தொடர்வோம்!


விட்டுக்கொடுப்பதால்

தவறொன்றும் இல்லை!

விட்டுக்கொடுக்கும் மனமே

உறவுகளைக் காக்கும் நல்ல உள்ளம்!


வாழ்வது சில காலம்;

வாழும் காலத்தில் அன்பைப் பகிர்வோம்!

வெறுப்பையும் கோபத்தையும் விட்டுவிட்டு,

பாசத்தால் உள்ளங்களை இணைப்போம்!


நாம் இவ்வுலகை விட்டுச் சென்றாலும்,

நம் அன்பு மட்டும் நிலைத்திருக்கட்டும்!


நம் வாழ்வின் அடையாளமாக

அன்பு நிறைந்த உள்ளத்தை விட்டுச் செல்வோம்! 


(V. JAYANTHI , Graduate teacher, Creative  Writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்