12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்

Aug 05, 2025,10:52 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 20ம் தேதி செவ்வாய்கிழமை

ஏகாதசி. பகல் 01.03 வரை ஏகாதசி திதியும் பிறகு துவாதசி திதியும் உள்ளது. இன்று நாள் காலை 11.58 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 11.58 வரை சித்தயோகமும் , பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். பெண்கள் வீட்டை அழகுபடுத்தி மகிழ்வார்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கும். குழந்தைகளுக்கு உடல் நலம் முன்னேற்றம் ஏற்படும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு அதிகரிக்கும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும்.


ரிஷபம் - கிருத்திகை, ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமானவர்களைத் தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது தான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. 


மிதுனம் - புதுமணத் தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. உடல்நலம் தேறும். நட்பு வட்டம் விரிவடையும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைகள் சுமூகமாக செல்லும். மாணவர்கள் ஆசிரியர் சொல்படி நடப்பர்.


கடகம் - வெளி உணவுகளை தவிர்க்கவும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் உதவுவர். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். பற்று வரவு வசூலாகும். உடல்நலனில் கவனம் வேண்டும். பெற்றோரின் கனவு பலிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 


சிம்மம் - புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். விஐபி.,களுக்கு நெருக்கமாவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.


கன்னி - வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வாகனக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் மனமகிழ்ச்சி கிடைக்கும். 


துலாம் -   உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். அழகு நிலையங்கள் ஆரம்பிக்க திட்டமிடுவீர்கள். 


விருச்சிகம் - பெண்களுக்கு வீட்டில் மதிப்பு கூடும். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியாக இருக்கவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். ஒரு சிலர் பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவர். மாணவர்கள் பகுதி படிப்பில் சேருவர். 


தனுசு -   மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவர். உடல் நலம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 


மகரம் - தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் அவர்கள் சொல்படி நடப்பர். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு டெண்டர் போன்றவைகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.


கும்பம் -  பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். வரவேண்டிய பணம் இன்று வசூலாகும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். பிறந்தநாள், அறுபதாம் திருமணம், கிரகப் பிரவேசத்தில் கலந்து கொண்டு முதல் மரியாதையைப் பெறுவீர்கள். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். 


மீனம் - அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். உடலில் உற்சாகம் வெளிப்படும். உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எங்கள் வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கிறார்கள்.. அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் புலம்பல்

news

சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!

news

தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

news

மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்

news

தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?

news

ஓவலில் இந்தியா அதிரடி.. 6 ரன் வித்தியாசத்தில் ஸ்டன்னிங் வெற்றி.. டெஸ்ட் தொடர் சமன்!

news

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

அருணாச்சலப் பிரதேச விவகாரம்: ராகுல் காந்தி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்