தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீராம நவமி. அதிகாலை 01.07 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 10.31 வரை புனர்பூசம் நட்சத்திரம், பிறகு பூசம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 03.30 முதல் 04.30
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்

இன்றைய ராசிபலன் :
மேஷம் - புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நீர் நிலைகளில் கவனம் வேண்டும். அதிரடியாக சமால்களை சமாளிப்பீர்கள். புதிய உணவுகளில் கவனம் தேவை. வெற்றி நிறைந்த நாள்.
ரிஷபம் - முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறுதூர பயணம் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நலம் நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புகழ் கிடைக்கும்.
கடகம் - வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்களில் இருந்த தடைகளை அறிவீர்கள். பொது வாழ்வில் மாறுபட்ட சூழல் உண்டாகும். தற்பெருமை பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் முழுமை இன்றி ஈடுபடுவீர்கள். குணங்களில் மாற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம் - எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். முயற்சிகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
கன்னி - பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும்.
துலாம் - சொத்துக்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். மக்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு அனுகூலமாக சூழல் உருவாகும். பேச்சுக்களில் காரிய சித்தி ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். குடும்பத்தின் ஆதரவாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாளாக இருக்கும்.
விருச்சிகம் - தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன் யோசனை இன்றி செயல்படுவதை தவிர்க்கவும். தீர்த்த யாத்திரைகளில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல்கள் உருவாகும். சுகமான நாள்.
தனுசு - மறைமுக எதிர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். வெளி இடங்களில் அமைதி காக்கவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
மகரம் - மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அமைதியான நாள்.
கும்பம் - முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். யோகமான நாள்
மீனம் - மனதில் புதிய தேடல்கள் உருவாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாளாக இருக்கும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}