தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 21ம் தேதி சனிக்கிழமை
அதிகாலை 02.38 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இன்று இரவு 11.43 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 11.43 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்
மேஷம் - கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வெளி நபர்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கவும். உறவினர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.
ரிஷபம் - நீங்கள் விரும்பிய நாட்டிற்கு செல்ல அனுமதி கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். தொழிலில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தினர் உதவுவார்கள். உங்கள் துணையிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.
மிதுனம் - கலைஞர்களின் கனவு நனவாகும். தம்பதிகளிடையே சண்டை வராமல் இருக்க வார்த்தைகளை குறைக்கவும். வியாபாரிகள் கடின உழைப்பால் லாபம் அடைவார்கள். வெளி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பாராத செலவுகள் வரலாம்.
கடகம் - இன்று புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அதனால் எந்த ஒரு நல்ல காரியமும் தொடங்க வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
சிம்மம் - வேலை செய்பவர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. சினிமா, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வாங்கிய கடனை அடைத்து சந்தோஷம் அடைவீர்கள்.
கன்னி - குடும்ப தலைவிகளின் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவார்கள். உடல் நலனில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணம் நன்றாக வரும்.
துலாம் - பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வெற்றி தரும். பணம் உதவி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். மேல் படிப்பிற்காக முயற்சி செய்வார்கள்.
விருச்சிகம் - பெண்களின் ஆசைகளை கணவர் நிறைவேற்றுவார். வியாபாரிகளுக்கு நிறைய பணம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருந்த மந்த நிலை மாறும்.
தனுசு - பழைய நண்பர்கள் உதவி செய்வார்கள். பெண்களுக்கு பணம் நன்றாக வரும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். சிலர் வீடு, மனை வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் போக வாய்ப்பு வரும்.
மகரம் - தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயிகளுக்கு வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம் - விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் இருக்கும். பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் வரலாம். அமைதியாக இருக்கவும். காதலர்களின் அன்பு அதிகமாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடியும். ஒரு பகுதி கடனை அடைப்பீர்கள்.
மீனம் - நெருங்கிய நண்பர்கள் உங்களிடம் இருந்த மனக்கசப்பை மறந்து நட்பாக பழகுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தந்தையுடன் இணக்கமாக இருந்தால் உங்களுக்கு நல்லது நடக்கும்.
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து கிராம் 10,000த்தை கடந்தது!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 06, 2025... வருமானம் அதிகரிக்க போகும் ராசிகள்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. இபிஎஸ்.க்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா.. பாடல் புகழ்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
ஒன்றிணைந்த அதிமுக.. செங்கோட்டையன் சொல்வதே சரி.. ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன் ஆதரவு
{{comments.comment}}