12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 07, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும் ராசிகள்

Aug 07, 2025,10:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 22ம் தேதி வியாழக்கிழமை

ஆடித்தபசு. பகல் 02.45 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இன்று மாலை 3 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை அமிர்தயோகமும் , பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வளர்ச்சி சந்தோஷம் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை. 


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தம்பதிகள் யோசித்து பேசவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும். அரசியல் தொடர்புகள் மூலம் நன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல நாள். உடல் நலம் மேம்படும். 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளலாம். புதிய முயற்சிகள் வேண்டாம். இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். 


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு குழந்தைகளுக்கு உடல் நலத்தில் சிறிய பிரச்சனைகள் வரலாம். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். தொழிலில் நிதானம் தேவை. பெண்களுக்கு அக்கம்பக்கத்தினர் உதவி செய்வார்கள். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். பழைய நினைவுகள் மனதை பாதிக்கும். பண நெருக்கடியை சமாளிப்பீர்கள். 


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் பல மடங்கு விரிவடையும் வாய்ப்பு உள்ளது. பயன்படுத்திக் கொள்வது நல்லது. வாகன செலவு ஏற்படும். குடும்பத்தில் விருந்தினர் வருகை இருக்கும். இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு புதிய ஆடைகள் சந்தோஷம் தரும். பயண யோகம் உண்டு. 


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியாக வேலை செய்வது நிம்மதி தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். புதிய முயற்சி ஆரம்பிக்கலாம். உறவினர் மூலம் நன்மை கிடைக்கும். 


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு பணவரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பெண்களுக்கு கல்யாணம் தொடர்பான சந்திப்பு ஏற்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். புதிய நபர்களுடன் தொடர்பு ஏற்படும். வீட்டு வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயண யோகம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பண வரவு நிலைத்திருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். வீட்டில் அமைதி நிலவும். பெண்களுக்கு ஆதாயங்கள் உண்டு. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். வாகன பராமரிப்பில் கவனம் தேவை. பயணங்கள் சீராக நடக்கும். மொத்தத்தில் முன்னேற்றம் காணப்படும் நாள்.


தனுசு -   தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பெண்களுக்கு அழகு சாதனப் பொருட்களில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நன்மை உண்டு. வீடு தொடர்பான திட்டம் வெற்றி அடையும்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு உறவினர் மூலம் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் நல்லிணக்கம் காணலாம். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசியல் தொடர்புகள் நன்மை தரும். தொழிலில் பழைய நஷ்டம் ஈடு கட்டப்படும். தொழில் விரிவாக்கத்திற்கு வாய்ப்பு உள்ளது. பயணத்திற்கு நல்ல நாள். 


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய வியாபாரம் ஆரம்பிக்கலாம். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் நலம் மேம்படும். சமய வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்களில் கவனம் தேவை. பணவரவு சீராக இருக்கும். பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கைகூடும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். உறவினர் வழியாக நன்மைகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் இணையதளம் மூலம் கிடைப்பார்கள். அவர்களிடம் கவனம் தேவை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!

news

தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!

news

நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

news

வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!

news

புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது

news

உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!

news

Trump Tax: அமெரிக்காவை ஆட்டம் காண வைக்க நம்மால் முடியாதா.. நாம் என்ன செய்ய வேண்டும்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 07, 2025... இன்று நன்மைகள் அதிகரிக்கும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்