12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 08, 2025... இன்று செல்வாக்கு அதிகரிக்கும் ராசிகள்

Aug 08, 2025,10:13 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 23ம் தேதி வெள்ளிக்கிழமை

வரலட்சுமி விரதம், பெளர்ணமி, திருவோணம் விரதம். ஆடி நான்காவது வெள்ளி. பகல் 02.51 வரை சதுர்த்தசி திதியும் பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. இன்று மாலை 03.47 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று மாலை 03.47 வரை சித்தயோகமும் , பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் - மிருகசீரிடம், திருவாதிரை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அரசாங்க உதவி கிடைக்கும். வருமானம் கொஞ்சம் சீராக இருக்கும். பயணத்தில் தாமதம் ஏற்படலாம். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். நல்ல யோசனைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் வரும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். 


ரிஷபம் - வியாபாரம் நன்றாக நடக்கும். பெண்களுக்கு வேலையில் டென்ஷன் இருக்கும். திட்டமிட்ட வேலைகளை முடிக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். சாப்பாட்டு நேரத்தை மாத்தாதீங்க. வெளியில சாப்பிடாதீங்க. 


மிதுனம் - இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் ரொம்ப கவனமா இருக்கணும். முக்கியமான விஷயம் இருந்தா மட்டும் பயணம் பண்ணுங்க. புதுசா எதுவும் செய்ய வேண்டாம். கடவுளை கும்பிடுங்க. யாரோடையும் சண்டை போடாதீங்க. 


கடகம் - துணை மேல நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் மொபைல் போனை ரொம்ப நேரம் பார்க்காதீங்க. குடும்ப உறவு நல்லா இருக்கும். பெண்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனை வரலாம். கால்ல வலி இருக்கும். பிசியோதெரபி பண்ணுங்க.


சிம்மம் - பெரியவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். குடும்ப தலைவிகள் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. மாணவர்கள் பொறுமையா படிங்க. வியாபாரத்தில் போட்டி இருக்கும். புதுசா யோசிச்சா லாபம் கிடைக்கும்.


கன்னி - ஆன்மீக எண்ணங்கள் வரும். உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல நேரம். நிறைய உழைச்சா நல்ல பலன் கிடைக்கும். வேலையில பதவி உயர்வு வரும். இளைஞர்களுக்கு கல்யாணம் நடக்கும். 


துலாம் -   வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கும். பெண்களுக்கு படிப்புல ஆர்வம் வரும். கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும். பெற்றோருக்கு டென்ஷன் குறையும். கடன் குறையும். வீடு வாங்க சான்ஸ் இருக்கு. புது உறவுகள் வரும். அவங்களால நன்மை கிடைக்கும். 


விருச்சிகம் - குடும்ப தலைவிகள் புத்திசாலித்தனமா பிரச்சனைகளை சமாளிப்பாங்க. மாணவர்கள் புதுசா கத்துக்க ஆர்வமா இருப்பாங்க. வண்டில போகும்போது கவனமா இருங்க. பெண்களுக்கு வயித்துல பிரச்சனை வந்து சரியாகும். வியாபாரத்தில் பழைய நண்பர் உதவி செய்வார். 


தனுசு -   வேலை செய்றவங்களுக்கு வேலையில நல்ல மாற்றம் வரும். புத்திசாலித்தனமா முடிவு எடுக்கணும். குடும்பத்துல மரியாதை கிடைக்கும். உடம்பை நல்லா பாத்துக்கோங்க. பேங்க்ல லோன் கிடைக்கும். பாதுகாப்பு பத்தி யோசிப்பீங்க. பெரியவங்க ஆசீர்வாதம் கிடைக்கும். 


மகரம் - இன்னைக்கு பணம் நிறைய வரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். குடும்பத்துல சந்தோஷம் இருக்கும். மனசுல தைரியம் வரும். எதிர்கால திட்டம் நடக்கும். சில பேர் எதிர்ப்பு சொல்லுவாங்க. நீங்க சுதந்திரமா செயல்படுவீங்க. கடவுள் மேல நம்பிக்கை வரும்.


கும்பம் -  மனசு அமைதியா இருக்கும். புடிச்சது நடக்கும். பழைய முயற்சிக்கு இப்போ பலன் கிடைக்கும். குடும்பத்துல சின்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்கலாம். வேலை கிடைக்கும். பெண்கள் திறமையை நிரூபிக்க சான்ஸ் கிடைக்கும். உடம்பு நல்லா இருக்கும். 


மீனம் - இன்னைக்கு திடீர்னு செலவு வரலாம். ஆனா பணம் வந்துகிட்டே இருக்கும். குடும்பத்துல ஒற்றுமை இருக்கும். பெண்கள் இன்னைக்கு சாதனை பண்ணுவாங்க. பயணம் நல்லா இருக்கும். தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நம்பிக்கை வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?

news

தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

news

BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

news

டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்

news

டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

news

ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

news

ரக்ஷா பந்தன் 2025.. உடன்பிறப்புகளின் இனிய பந்தம்.. பாசப் பிணைப்பின் அடையாளம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 08, 2025... இன்று செல்வாக்கு அதிகரிக்கும் ராசிகள்

news

தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்