12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 08, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

Jul 08, 2025,10:28 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு ஜூலை 08 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 

இன்றைய பஞ்சாங்கம் :

விசுவாவசு வருடம், ஆனி 24ம் தேதி செவ்வாய்கிழமை
பிரதோஷம். அதிகாலை 12.03 வரை துவாதசி திதியும் பிறகு திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 02.30 வரை அனுஷம் நட்சத்திரமும், அதன் பிறகு கேட்டை  நட்சத்திரமும் உள்ளது. இன்று நாம் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம்: காலை 07.30 முதல் 8 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை

சந்திராஷ்டமம் -  அஸ்வினி, பரணி



இன்றைய ராசிபலன் :

மேஷம் - ஆன்மீகப் பணிகள் சிறக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும். பொதுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

ரிஷபம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரிய தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. 

மிதுனம் - தாய்வழி உறவினர்களால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிட்டும்.யாருக்கும் ஜாமின் கையெழுத்துப் போட வேண்டாம். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும். மனைவி வழியில் உதவிகள் உண்டு. 

கடகம் - உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்கள் நினைத்தது நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். 

சிம்மம் - திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். புதிய வாகனம் வாங்குவீர்கள். 

கன்னி - உடல் நலம் பலம் பெறும். விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

துலாம் -   உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியான போக்கே நிலவும். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

விருச்சிகம் - வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது தங்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவிகரமாக அமையும். மருத்துவ செலவு உண்டு. உறவினர் உதவுவர். கணவன் மனைவிக்கிடையே சண்டை வரலாம். விட்டுக் கொடுத்து போனால் நல்லது. வேலை செய்பவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்களால் உதவி கிடைக்கும்.

தனுசு -  வீடு, மனை சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். வீடு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வியாபாரிகள் வேறு ஒரு புதிய பொருளை விற்பனை செய்ய முற்படுவார்கள். முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். பணம் அதிகமாக சேரும்.

மகரம் - கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரிகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்.  உங்களுடைய பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். திடீர் பணவரவு உண்டு. புதிய தொழிலில் ஆர்வம் கூடும். எல்லா வழியிலும் பணம் வரும். அத்தியாவசிய தேவை நிறைவேறும்.

கும்பம் -  வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் வேலை பளு குறையும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து போனால் நல்லது நடக்கும். பெண்களின் சேமிப்பு உயரும். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஓட்டல் சாப்பாட்டை தவிர்ப்பது நல்லது. 

மீனம் - மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வது நல்லது. உடல் நலம் நன்றாக இருக்கும். தள்ளிப்போன நல்ல காரியங்கள் நடக்கும். பணம் தாராளமாக வரும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். வியாபாரத்தில் தங்கள் மனைவி ஒத்துழைப்பார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்