தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 05 ம் தேதி வெள்ளிக்கிழமை
சுபமுகூர்த்த நாள். பகல் 02.26 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இன்று காலை 06.02 வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை சித்தயோகமும் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : 12.30 முதல் 01.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வாழ்க்கை துணை வழியில் அனுசரித்து செல்லவும். கடன் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும். தாமதம் நிறைந்த நாள்.
ரிஷபம் - பேச்சுக்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். வியாபார முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். சமூக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.
மிதுனம் - ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியாக அறிமுகத்தால் லாபம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம் - குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம் - எதிர்பாராத பொருட் சேர்க்கை வாய்ப்புகள் அமையும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் சிந்தித்து செயல்படவும். பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். பொழுது போக்கு செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெருமையான நாள்.
கன்னி - சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விதண்டாவாத பேச்சுக்களை குறைப்பது மனஅமைதியை தரும். சமூக சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனையால் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம் - குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உழைப்பிற்கு உண்டான பாராட்டு கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.
விருச்சிகம் - நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்லவும். தேவை அறிந்து வாக்குறுதி அளிப்பது நல்லது. பலயணத்தால் பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உத்தியோகத்தில் உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும் நாள்.
தனுசு - மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். அரசு காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அலுவலக பணிகளில் அட்சியமின்றி செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.
மகரம் - சுப காரியம் தொடர்பான பேச்சுக்கள் சாதகமாகும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். அலைபேசி வழியாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தம்பதிகளுக்கும் நெருக்கம் ஏற்படும். பிறமொழி மக்களின் ஆதரவு கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.
கும்பம் - ரசனையில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் அதிகரிக்கும். செல்வ சேர்க்கைக்கான வாய்ப்பு அமையும்.உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியம் கைகூடும்.
மீனம் - உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனை பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!
{{comments.comment}}