12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18, 2025... இன்றைய நாள் எப்படி இருக்கு?

Aug 18, 2025,10:20 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆவணி 02ம் தேதி திங்கட்கிழமை

கரிநாள். மாலை 06.39 வரை தசமி திதியும் பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இன்று காலை 04.28 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.28 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.03 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 9 முதல் 10 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - எதிர்க் கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். ரியல் எஸ்டேட், கமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானம் உயரும். பிள்ளைகள் விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே கவனம் தேவை.


ரிஷபம் - பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிட்டும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். 


மிதுனம் - வழக்குகள் இழுத்தடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நலம் தேறும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். 


கடகம் - குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். பூர்வீக சொத்தில் தங்கள் பங்கு கிடைக்கும். கூட்டு வியாபாரிகளிடையே நல்லிணக்கம் உண்டாகும்.


சிம்மம் - விரும்பிய பொருள்கள் வாங்குவீர்கள். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். விஐபி.,களுக்கு நெருக்கமாவீர்கள். காதலர்களிடையே ஊடல் விலகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் மேலிடத்தில் நெருக்கமாவர். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும்.


கன்னி - உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். பழுதான வாகனம் சரியாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவர். 


துலாம் -   இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.


விருச்சிகம் - பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளுக்கு இடமுண்டு. வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் நடக்கும். அது தங்களுக்கு மகிழ்ச்சி தரும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும்.


தனுசு -  ஷேர் மூலம் பணம் வரும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். அரைகுறையாக கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.


மகரம் - எதிர்பார்த்த பணம் கிடைத்து விடும். தங்கள் குடும்பத்தில் உள்ள நல்ல விசயங்களுக்கு தம்பதிகள் முடிவெடுத்து செயல்படுவர். நினைத்த காரியம் வெற்றி பெறும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. 


கும்பம் -  வழக்குகளில் வெற்றி கிட்டும். தங்கள் வங்கியில் டெபாசிட் உயரும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். யோகா மற்றும் நடன வகுப்புகளில் மனம் நாடும். அதற்குண்டான முயற்சிகள் பலிக்கும்.


மீனம் - எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். கவலை வேண்டாம். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. யாரிடமும் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜகவுக்கு செக் வைக்க.. இன்னொரு தமிழ்நாட்டுக்காரரை வேட்பாளராக்குமா இந்தியா கூட்டணி?

news

ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமில்லை... இதோ இன்றைய தங்கம் விலை நிலவரம்!

news

7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் ..இல்லாவிட்டால் புகார் வாபஸ்..ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன்கெடு

news

துணைக் குடியரசுத் தலைவர்.. யாரை வேட்பாளராக நிறுத்தலாம்?.. இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை!

news

Motivational Monday: 1000 புள்ளிகள் அதிரடி உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்!

news

ஜகதீப் தன்கர் டூ சி.பி. ராதாகிருஷ்ணன்.. ஒருவர் அரசியல் புயல்.. சிபி ராதாகிருஷ்ணன் எப்படி இருப்பார்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18, 2025... இன்றைய நாள் எப்படி இருக்கு?

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

அதிகம் பார்க்கும் செய்திகள்