தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 04ம் தேதி புதன்கிழமை
பிரதோஷம். சுபமுகூர்த்த நாள். மாலை 03.03 வரை துவாதசி திதியும் பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 02.50 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 02.50 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
மேஷம் - மேஷம் ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்லபடியாக முடியும். வசதி வாய்ப்புகள் பெருகும். முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் நட்பால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். பெரிய வேலைகளை சீக்கிரமாக முடிப்பீர்கள்.
ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு மரியாதை கூடும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். இன்று பணப் பிரச்சினை இருக்காது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களுக்கு திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
கடகம் - கடகம் ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும், சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். மறைமுகமான அவமானங்கள் வரலாம். பொறுமையாக இருக்க வேண்டும்.
சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பங்குதாரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். வேலையாட்களிடம் அன்பாக பேசி வேலை வாங்குவீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். உங்களுக்கு பிடித்த வரன் அமையும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு வழக்கறிஞர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும். மாணவர்கள் படிப்பில் நன்றாக கவனம் செலுத்துவார்கள். வெளியுலகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பிள்ளைகளிடம் சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அவ்வப்போது மறதி மற்றும் கோபம் வரலாம். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அடிக்கடி எழுதி பார்க்கவும். பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும்.
விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கேட்டை நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்ற நட்சத்திரக்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்கள் இறைவனை வணங்கிவிட்டு வேலையை தொடங்கவும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு சுப செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த சண்டை விலகும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களிடம் பணம் மற்றும் புகழ் இருந்தாலும் பந்தா காட்டாத குணம் உங்களுக்கு உண்டு. அதனால் உங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
மகரம் - மகரம் ராசிக்காரர்களுக்கு காதல் தொடர்பான குழப்பங்கள் தீரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அதிக லாபம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிரபலமான புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் உங்களை பாராட்டுவார்கள்.
கும்பம் - கும்பம் ராசிக்காரர்கள் விரும்பிய துறையில் சேருவீர்கள். சிலருக்கு வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் கடையை பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள்.
மீனம் - மீனம் ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். அதிகாரிகள் உங்களுக்கு நல்ல பெயர் கொடுப்பார்கள். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள்.
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
{{comments.comment}}