தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 05ம் தேதி வியாழக்கிழமை
மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த நாள். பகல் 01.45 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 02.06 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 12.00 முதல் 01.00 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : கிடையாது ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவும் கிட்டும். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பழகுவது நல்லது. அலுவலகத்தில் வேலை சுமை இருக்கும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் பழைய கடன்களை அடைப்பார்கள். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய கிளைகள் திறக்க வாய்ப்புள்ளது. தந்தையின் சொல்லை கேட்பது நல்லது. சொந்தமாக வீடு, நிலம் வாங்க ஆசைப்படுவீர்கள்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு வெளியூரில் வேலை கிடைக்கலாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பதவி உயர்வு பற்றிய செய்தி வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தொழிலில் வேலையாட்கள் உதவுவார்கள். கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை வரலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்கு தொகை வந்து சேரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதாவது, வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில் வேலை சுமை அதிகரிக்கும். உடல்நிலை சரியில்லாதவர்கள் குணமடைவார்கள். ஆன்மிக தலங்களுக்கு செல்ல ஆசைப்படுவீர்கள்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. நல்ல வரன் கிடைக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து கல்லூரிகளில் இடம் பெறுவார்கள். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். புதிய தொழில் தொடங்குவார்கள். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவார்கள். அதற்கான வேலைகளை தொடங்குவார்கள்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை. கடவுளை வழிபட்டு வேலையை தொடங்குங்கள். இன்று தடைகள் வரலாம். சந்திராஷ்டமம் இருப்பதால் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு புரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. மருத்துவ செலவுகள் வரலாம். உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். பயணங்களால் லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழி பிறக்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு எதிரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். மகளுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வருமானம் உயரும். குழந்தைகள் விளையாடும்போது காயம் ஏற்படலாம். எனவே கவனம் தேவை.
மீனம் - மீன ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாறுதலாகி வருவார்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் விரும்பியபடி வேலை நடக்கும். நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.
மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது மதுரை பாரபத்தி...மாநாட்டு திடலுக்கு முன்கூட்டியே வருகிறார் விஜய்
Madurai TVK Maanadu: தவெக மாநாட்டில் விஜய் செய்ய இருக்கும் தரமான சம்பவம்!
12 நாட்கள் சரிவிற்கு பின்னர்.... இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 உயர்வு!
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு
Vinayakar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது.. அதன் சிறப்புகள் என்ன?
தவெக 2வது மாநில மாநாடு.. காலையிலேயே நிரம்பிய மாநாட்டு வளாகம்.. ஸ்தம்பித்தது மதுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 21, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்
{{comments.comment}}