12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூன் 24, 2025...அதிர்ஷ்டம் பெற போகும் 4 ராசிகள்

Jun 24, 2025,10:27 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 10ம் தேதி செவ்வாய்கிழமை

மாலை 06.56 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. பகல் 12.52 வரை ரோகிணி நட்சத்திரம், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று பகல் 12.52 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 01.30 முதல் 02.30 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  சுவாதி, விசாகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து வருத்தப்பட வேண்டாம். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைக்காரர்கள் ஏமாற்றியதை கண்டுபிடிப்பீர்கள்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினர் உதவுவார்கள். பெண்கள் தங்கள் துணையிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு அனுமதி கிடைக்கும். பெற்றோர்கள் ஒத்துழைப்பார்கள். தொழிலில் முதலீடு செய்வீர்கள்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல செழிப்பு உண்டாகும். அலுவலகத்தில் இருந்த மந்த நிலை மாறும். பெண்கள் எதிர்பார்ப்புகளை கணவர் பூர்த்தி செய்வார். வியாபாரிகளுக்கு பணம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய பட வாய்ப்பு வரும்.


கடகம் - கடக ராசிக்காரர்களின் குடும்பத் தலைவிகளின் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் நல்ல செய்தி கொண்டு வருவர். உடல் நலனில் அக்கறை தேவை. பணவரவு நன்றாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவார்கள்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு நிர்வாகப் பொறுப்புகள் கூடும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. சினிமா, நாடகம் போன்ற துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வாங்கிய கடனை அடைத்து சந்தோஷம் அடைவீர்கள். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். 


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் தம்பதிகளாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். பயணத்தில் சண்டை வராமல் இருக்க வார்த்தைகளை குறைக்கவும். வியாபாரிகள் கடினமாக உழைத்து லாபம் பெறுவார்கள். கலைஞர்களின் கனவு நனவாகும். விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 


துலாம் -  துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுவாதி, விசாகம் நட்சத்திரம் என்பதால் சந்திராஷ்டமம். அதனால் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அது சண்டையில் முடியலாம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்கள் வேலைகளை தொடங்கலாம். புதிய முயற்சிகள் செய்யலாம். 


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும். வெளியூர் செல்லும் திட்டம் உருவாகும். தம்பதிகளுக்குள் புரிதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். 


தனுசு - தனுசு ராசிக்காரர்களின் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் மேற்படிப்புக்கு முயற்சி செய்வார்கள். பிள்ளைகளின் திருமண முயற்சிகள் வெற்றி தரும். பண உதவி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.  


மகரம் - மகர ராசிக்காரர்களுடன் நண்பர்கள் மனக்கசப்பு நீங்கி பழகுவார்கள். மற்றவர்களிடம் கவனமாக இருங்கள். செலவுகள் வரும். தந்தையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தந்தையுடன் இணக்கமாக இருந்தால் நன்மை நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களின் காதல் பலப்படும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் வரலாம். அமைதியாக இருக்கவும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடியும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் இருக்கும். பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள். 


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பழைய நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலர் வீடு, மனை வாங்க முயற்சி செய்வார்கள். திடீர் பயணம் போக வாய்ப்பு வரும். பெண்களுக்கு பணம் வரும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்