12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்

Oct 24, 2025,10:06 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 07 ம் தேதி வெள்ளிக்கிழமை

சுப முகூர்த்த தினம். ஐக்கிய நாடுகள் தினம். உலக போலியோ தினம். இரவு 11.49 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. அதிகாலை 04.36 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால், இன்று முக்கியமான நபர்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் இருப்பதால், சுப காரியங்களைத் தள்ளி வைப்பது சிறந்தது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்கள், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளுக்காக இப்போதிலிருந்தே சேமிக்கத் தொடங்குவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளிக்கு ஆர்வமுடன் செல்வார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். மாணவர்கள் பொது அறிவுத் துறையில் உள்ள புத்தகங்களை வாங்குவதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் அடைவார்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்கள் தேக ஆரோக்கியம் சிறக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, பெண்களுக்கு சளி தொந்தரவு வந்து போகும். வேலையில் உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். எதிர்காலத்திற்காக ஒரு தொகையை உங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கிரே.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள், காதல் விஷயங்களில் கவனம் தேவை. வருவாய் அதிகரிக்கும். கடன் சுமை நீங்கும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தினரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவார்கள். பங்குச் சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் ரோஸ். 


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, பணவரவுக்குப் பஞ்சமில்லை. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் தோன்றும். பொறுமையுடன் அணுகினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்கள், தம்பதிகள் சமரசமாகச் செல்வார்கள். வரவுக்கேற்ப செலவு செய்வார்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் தங்கள் குடும்ப விஷயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைக் குவிப்பார்கள். தேக ஆரோக்கியம் நன்கு இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள், பக்கத்து வீட்டாரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்தி கிட்டும். தம்பதிகள் விட்டுக்கொடுப்பார்கள். நினைத்தவாறே நல்ல வரன் கைகூடும். தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, சகோதரிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்குக் கிடைக்கும். தாங்கள் நினைத்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் வேற்று மொழியைக் கற்க ஆர்வம் கொள்வார்கள். உடலில் சோர்வு நீங்கும். உணவு வியாபாரம் நன்கு நடைபெறும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் நீலம்.


மகரம் - மகர ராசிக்காரர்கள், வீடு மற்றும் தங்கள் அலுவலக வேலையாட்களை அனுசரித்துப் போக வேண்டும். உத்யோகத்தில் வேலைப் பளு அதிகம் இருக்கும். தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, பங்குச் சந்தைகளில் லாபம் கிட்டும். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. எதிர்பாலினரிடம் தங்கள் அந்தரங்க விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பொன்நிறம்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயைப் பெருக்கத் திட்டமிடுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். தேகம் பளிச்சிடும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்