12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூன் 25, 2025... இந்த 5 ராசிக்காரர்களுக்கு இன்று பணம் வரும்

Jun 25, 2025,11:27 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூன் 25 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆனி 11ம் தேதி புதன்கிழமை

அமாவாசை. மாலை 5 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 11.39 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், அதன் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : 10.30 முதல் 11.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  விசாகம், அனுஷம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். சொத்து ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் சாதனை புரிவார்கள். வியாபாரம் செழிப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கூட வேலை செய்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். 


ரிஷபம் - கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் முயற்சியால் ஒரு முக்கியமான வேலையை முடிப்பீர்கள். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று திரைப்படம் பார்ப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். 


மிதுனம் - காதலர்களுக்கு சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் நேர்மையை பார்த்து உங்களுக்கு உயர் பதவி கிடைக்கும். உறவினர்கள் நல்ல செய்தியுடன் வருவார்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் இருக்கும். பெற்றோரின் உடல் நலனை கவனிப்பது நல்லது. 


கடகம் - வேலை சம்பந்தமான நல்ல செய்தி வரும். பெண்கள் செலவுகளை சமாளிப்பார்கள். வக்கீல்கள் வழக்கு சம்பந்தமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்ல பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும்.


சிம்மம் - எதிர்பார்த்த செய்தி சாதகமாக இருக்கும். பெண்கள் செலவுகளை சமாளிப்பார்கள். மற்ற மதத்தினர் உதவுவார்கள். சிறிய தூர பயணங்கள் அதிகரிக்கும். அந்த பயணங்கள் உங்களுக்கு நன்மையை தரும். உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கோபப்பட வேண்டாம். அவர்களை அன்பாக வேலை வாங்கவும். 


கன்னி - விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள் வருவார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். பணம் நிறைய வரும். உடல் பளபளக்கும்.


துலாம் -  உங்கள் மனைவி உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வும், இன்சென்டிவ்வும் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள்.


விருச்சிகம் - இன்று விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அதனால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அது சண்டையில் முடியும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்கள் வேலைகளை தொடங்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். 


தனுசு - புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதலர்கள் திருமணம் செய்து கொள்ள தயாராவார்கள். எல்லா பக்கத்திலிருந்தும் பணம் வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பார்கள்.


மகரம் - புதிய வாகனம் வாங்க திட்டம் போடுவீர்கள். பழைய வீட்டை சரி செய்வீர்கள். உங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டை அதிகரிப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். 


கும்பம் -  கல்லூரி மற்றும் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். விடுமுறை என்பதால் குலதெய்வ கோவிலுக்கு செல்வீர்கள். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெற்றோர்கள் உடல் நலம் பெறுவார்கள். 


மீனம் - விஐபி.,களின் தொடர்பால் நன்மை உண்டாகும். உங்களுக்கு பிடித்த இடத்தில் வேலை செய்ய அனுமதி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து முடிவெடுப்பார்கள். வெளிநாட்டில் உங்களுடைய தொழில் புகழ் பெறும். அங்கும் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்