தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 10ம் தேதி செவ்வாய்கிழமை
பகல் 02.21 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 05.05 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
மேஷம் - தம்பதிகளின் கனவு நனவாகும். மருத்துவ செலவுகள் வரலாம். உறவினர்கள் உதவி செய்வார்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறலாம். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிட்டும். உடல் நலத்தில் கவனம் தேவை.
ரிஷபம் - வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தேவையற்ற பயம் நீங்கும். இறை பக்தி அதிகரிக்கும். வெளியூர் பயணம் செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவார்கள். அண்டை வீட்டாரிடம் நட்பு அதிகரிக்கும்.
மிதுனம் - வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது முக்கிய முடிவுகள் எடுக்க உதவும். மூத்த சகோதரியால் நன்மை உண்டு. தள்ளிப்போன சுபகாரியம் நடக்கும். பணம் தாராளமாக வரும். அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும்.
கடகம் - விற்பனையாளர்கள் சாதுர்யமாக பேசி விற்பனையை அதிகரிப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் வெளிநபர்கள் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மனைவி ஒத்துழைப்பார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல திருப்பம் ஏற்படும். வீடு கட்ட கடன் கிடைக்கும்.
சிம்மம் - நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மனைவி வீட்டாரிடம் நல்ல உறவு ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். வெளியில் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை. சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரமாக வைக்கவும். கையிருப்பு அதிகரிக்கும்.
கன்னி - மார்க்கெட்டிங் துறையினருக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்வார்கள். கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முடியும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
துலாம் - மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பார்கள். பெற்றோர்களின் உடல் நலம் மேம்படும். வேலை செய்பவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உதவி செய்வார்கள்.
விருச்சிகம் - பாதியில் நின்ற கட்டிட வேலை சிறப்பாக நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களின் கனவு நிறைவேறும். வேலை செய்பவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். கடல் சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
தனுசு - வியாபாரத்திற்கு வங்கி கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறப்பாக நடக்கும். புனித யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பங்குச் சந்தையில் லாபம் பெறுவீர்கள். பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பு கூடும்.
மகரம் - பெண்களின் சேமிப்பு அதிகரிக்கும். கணவரின் அன்புக்கு பாத்திரமாவார்கள். தடைகள் நீங்கும். எல்லாம் சுலபமாக முடியும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாபுறமும் இருந்து வரும். சுப நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்கும்.
கும்பம் - சதயம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அனைத்து காரியங்களையும் தொடங்கலாம்.
மீனம் - பெண்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகளிடையே நல்ல புரிதல் ஏற்படும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் நன்றாக படித்துவிட்டு எழுதவும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம்.. காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பிள்ளையார் பிள்ளையார்.. பெருமை வாய்ந்த பிள்ளையார்.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்!
குருதிப்பூக்கள் (சிறுகதை)
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!
வந்துருச்சு "பிள்ளையார் சதுர்த்தி".. பூரண கொழுக்கட்டை பண்ணலாமா?
நான் யார்? நாம் யார்? .. மகா தத்துவம் & மகா கேள்வி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26, 2025... இன்று இவங்க தான் கிங்
துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழரை தேர்வு செய்தது ஏன்? அமித்ஷா விளக்கம்
ஹைட்ரோ கார்பன் திட்டம்.. திமுகவின் துரோகங்களை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}